Sunday, August 22, 2010

Buffet - 23/08/2010

இந்த வாரம் எங்க போனாலும் பல்பு கூப்பிட்டு கூப்பிட்டு கொடுத்தாங்க. உதாரணத்துக்கு ஒண்ணு;


எனது மூன்று வயது பையன் காகிதத்தில் கிறுக்கி கிறுக்கி வெச்சிருந்தார். இதைப்பத்தி தங்கமணியிடம் கேட்டேன்.

"வைரமுத்து பையன் பாட்டு எழுதறான்" என சொல்லிப்போனாள்.


#############################################################################

அடுத்த வாரம் இங்கே நான் மகான் இல்லை போடுறாங்க. என்ன தமிழ் படம் போட்டாலும் போயிடறோம். மூன்று டாலருக்கு சுட சுட இட்லி விப்பாங்க.


#############################################################################


காலையில இருந்து கிட்ட தட்ட மூன்று மணி நேரம் செலவழித்து மட்டன் கோலா உருண்டை செய்து சாப்பிட்டு பார்த்தால் இனிப்போ இனிப்பு. கால் மணி நேரமா அதை முன்னாடி வைத்து நியுட்டன் ஆப்பிள் பார்த்த மாதிரி எங்க தப்பு நடந்ததுன்னு மண்டையை பிச்சுகிட்டு இருந்தேன். 

தங்கமணி என்னை ஒரு ஜந்து மாதிரி பார்த்து "நீங்க பொறித்து எடுத்த பாத்திரத்தில்தான் இரண்டு நாள் முன்னாடி குளோப் ஜாமூன் சக்கரை பாகு செய்தேன். நீங்க அடுப்பில் வெக்கிரக்கு முன்னாடி அதை கழுவலையா" என்றாள். நான் மட்டன் வாங்க போன வாரம் 120 மைல் போனது ஞாபகம் வந்தது.

#############################################################################





9 comments:

Chitra said...

மட்டன் கோலா ஜாமூன் ரெசிபி எழுதிட்டா போச்சு!!! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

Saran said...

//
Chitra said...
மட்டன் கோலா ஜாமூன் ரெசிபி எழுதிட்டா போச்சு!!! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

//

தெய்வசுகந்தி சகோதரி ரெடியா?

தெய்வசுகந்தி said...

ஆஹா! எழுதுங்க, செஞ்சு பாத்தரலாம்!! எதுக்கும் உங்க தங்கமணியை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம். இதை சாப்பிட்டு எதும் ஆகலையே? :-)

Balaji saravana said...

பரிசல் மூலமா இங்க வந்தேன் சரண்!
உங்களோட மத்த பதிவையும் படிச்சேன்!
இயல்பான நகைச்சுவை நண்பா.
வாழ்த்துக்கள்.

டம்பி மேவீ said...

கட்டாயம் பாருங்க தல ... நான் மகான் அல்ல ..எனக்கு பிடிச்சு இருக்கு ....

வறுத்த இட்லி உங்க ஊர் ல கிடைக்குதா தல ????

டம்பி மேவீ said...

வாவ் ...இந்த பதிவு ல ரஷ்ஷிய நாட்டோட இலக்கியத்தை பத்தி நல்ல சொல்லிருக்கீங்க

டம்பி மேவீ said...

next post epp thala

டம்பி மேவீ said...

"பரிசல் மூலமா இங்க வந்தேன் சரண்!"

அவ்வளவு பெரிய ரவுடி ஆ நீங்க

டம்பி மேவீ said...

தல என்னாச்சு ??? பதிலை காணல

Related Posts with Thumbnails