Friday, October 8, 2010

அடிச்சு கூட கேப்பாங்க, சொல்லீராதீக

ஒருநாள் நானும் எனது நண்பனும் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தோம். நல்ல கூட்டம். எங்களோட பஸ் ஸ்டாப் வந்ததும், அடிச்சு பிடிச்சு ரெண்டு பேரும் வெளியே வந்தோம்.

கீழே வந்தவன், திடீர்னு திரும்பி, பஸ்சுல நடுவுல ஜன்னல் ஓரமா உட்கார்ந்து இருந்தவனை பார்த்து " டேய் பச்சை சட்டை! ஏண்டா, நீங்க எல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கலை" என்று சொல்லிவிட்டு என்னையும் கூட்டிக்கிட்டு வேகமா நடந்தான். நான் திரும்பி பச்சை சட்டையை பார்த்தேன். பஸ்சில் இருக்கிற எல்லாரும் அவனை ஒரு பொறுக்கி ரேஞ்சுக்கு பாத்துகிட்டு இருந்தாங்க.

எனக்கு ஒன்னும் புரியாமல் "ஏண்டா மாப்ளை, நாமலே பஸ்சுல கடைசியில நின்னுகிட்டு இருந்தோம். அவன் யாருன்னும் தெரியாது. என்ன பண்ணினான்னும் தெரியாது. எதுக்குடா அவனை அப்படி திட்டிகிட்டு வந்தே?"ன்னேன்.

"ஒரு தைபூசத்துக்கு மச்சான், நான் பழனி போயிட்டு பஸ்சுல வந்துட்டு இருந்தேன். பொள்ளாச்சி பக்கம் வந்துகிட்டு இருக்கும்போது, இவன் அந்த பஸ் ஸ்டாப்புல நின்னுக்கிட்டு, தூங்கிட்டு இருந்த என்னை சத்தம் போட்டு கூப்பிட்டு 'மச்சான் எப்படி இருக்கீங்க? பிசினஸ் எல்லாம் எப்படி போகுது?' அப்படின்னான். எனக்கு ஒண்ணுமே புரியலைடா. நானும் ஒரு வாரமா குழம்பிகிட்டு இருந்தேன். யார்றா அவன் என்னைய பாத்து இப்படி விசாரிக்கிறான்னு ஒரே குழப்பமா இருந்துதுடா. ஆனா அதுக்கு அடுத்த வாரம்தான் நான் சூரியவம்சம் படம் பார்த்தேன். அன்னிக்கு எடுத்தாண்டா சபதம். இன்னிக்குதாண்டா கையில சிக்கினான்".

அந்த பச்சை சட்டைகாரன் நிலைமைய நெனச்சு பார்த்தேன். இப்போ பஸ்சுல அவனுக்கு என்ன ட்ரீட்மென்ட் கெடைசுட்டு இருக்கோன்னு.

டிஸ்கி: அந்த பச்சை சட்டைகாரனுக்கு தெரிஞ்சவங்க அல்லது பச்சை சட்டைகாரனே கூட உங்ககிட்ட யாரு என்னோட அந்த நண்பன்னு கேட்பாங்க நீங்க சொல்லீராதீக. அடிச்சுகூட கேப்பாங்க, சொல்லீராதீக! 

14 comments:

Balaji saravana said...

Romba seekiram vanthuteenga ;) enna boss aani athikamo?
onkalap paththi yaraavathu ketta nan oorlaye illanu solliduvomla..
sikkamattam intha singam... :)))

Saran said...

வாங்க பாலாஜி. ஆணி இல்ல கடபாறையே கொடுத்துட்டானுங்க. கெடைச்ச கேப்புல ஒரு குட்டி கெடா வெட்டி இருக்கேன். :-)

Balaji saravana said...

இன்ட்லில வோட்டு போட முடில என்னன்னு பாருங்க..

Saran said...

பாலாஜி யாரோ ரெண்டாவது ஓட்டு போட்டு இருக்காங்க (சத்தியமா கள்ள ஓட்டு இல்லை). இப்போ சரி ஆகிடுச்சுன்னு நெனைக்கிறேன் 

தெய்வசுகந்தி said...

:-)

Saran said...

// தெய்வசுகந்தி said...
:-)//

வாங்க வாங்க!

ப.செல்வக்குமார் said...

இங்கயும் வந்துட்டோம்ல ..!!

ப.செல்வக்குமார் said...

//அந்த பச்சை சட்டைகாரன் நிலைமைய நெனச்சு பார்த்தேன். இப்போ பஸ்சுல அவனுக்கு என்ன ட்ரீட்மென்ட் கெடைசுட்டு இருக்கோன்னு.
//

இப்படி வேற கிளப்பிட்டு திரியுறீங்களா ..?

Saran said...

//

இப்படி வேற கிளப்பிட்டு திரியுறீங்களா ..

//

இங்கயே குத்த வெச்சு மண்ணு தோண்டிட்டு இருங்க. ஒரு ரகசியம் சொல்றேன்.

மங்குனி அமைசர் said...

Saran said...

//

இப்படி வேற கிளப்பிட்டு திரியுறீங்களா ..

//

இங்கயே குத்த வெச்சு மண்ணு தோண்டிட்டு இருங்க. ஒரு ரகசியம் சொல்றேன்.
///

சரண் இதெல்லாம் நம்ம குரூப்பு போர்ப்படை தளபதிகள் , புது ஆடு மாட்டனா சொல்லுங்க

Saran said...

ஹிஹி ஒரு உள்குத்துதான்.

நாகராஜசோழன் MA said...

அது நீங்கதான் அப்படின்னு சொல்லமாட்டேன்.

Saran said...

வாங்க MLA. நாம என்னிக்கு உண்மை பேசி இருக்கோம், :)

எஸ்.கே said...

செம சூப்பர்!

Related Posts with Thumbnails