Sunday, August 22, 2010

Buffet - 23/08/2010

இந்த வாரம் எங்க போனாலும் பல்பு கூப்பிட்டு கூப்பிட்டு கொடுத்தாங்க. உதாரணத்துக்கு ஒண்ணு;


எனது மூன்று வயது பையன் காகிதத்தில் கிறுக்கி கிறுக்கி வெச்சிருந்தார். இதைப்பத்தி தங்கமணியிடம் கேட்டேன்.

"வைரமுத்து பையன் பாட்டு எழுதறான்" என சொல்லிப்போனாள்.


#############################################################################

அடுத்த வாரம் இங்கே நான் மகான் இல்லை போடுறாங்க. என்ன தமிழ் படம் போட்டாலும் போயிடறோம். மூன்று டாலருக்கு சுட சுட இட்லி விப்பாங்க.


#############################################################################


காலையில இருந்து கிட்ட தட்ட மூன்று மணி நேரம் செலவழித்து மட்டன் கோலா உருண்டை செய்து சாப்பிட்டு பார்த்தால் இனிப்போ இனிப்பு. கால் மணி நேரமா அதை முன்னாடி வைத்து நியுட்டன் ஆப்பிள் பார்த்த மாதிரி எங்க தப்பு நடந்ததுன்னு மண்டையை பிச்சுகிட்டு இருந்தேன். 

தங்கமணி என்னை ஒரு ஜந்து மாதிரி பார்த்து "நீங்க பொறித்து எடுத்த பாத்திரத்தில்தான் இரண்டு நாள் முன்னாடி குளோப் ஜாமூன் சக்கரை பாகு செய்தேன். நீங்க அடுப்பில் வெக்கிரக்கு முன்னாடி அதை கழுவலையா" என்றாள். நான் மட்டன் வாங்க போன வாரம் 120 மைல் போனது ஞாபகம் வந்தது.

#############################################################################

Wednesday, August 18, 2010

பின்நவீனத்துவமும், மேவீயும்


மறுபடியும் தம்பி (டம்பி) மேவீ ... என்னோட மூளையை கசக்க வெச்சு ஒரு பதிவு எழுத தூண்டிட்டார்... அது என்னன்னா... பின்நவீனத்துவம்...பின்நவீனத்துவம்னு ஒரு பக்கா சப்ஜெக்ட்.

அட நாமளும் நாடு நாடா திரியறமே... இத பத்தி ஏதாவது எழுதுவோம்னு பாத்தா...

"நடுவுல நடுவுல மானே தேனே போட்டுக்கணும்"னு டயலாக் மட்டும்தான் வருது.

கைக்கு வந்தத எழுதிப்ட்டு, பிரிஞ்சிருந்தா நவீனத்துவம்... இல்ல அப்பாலீக்கா பின்னாடி வந்து பொடணீய தட்டி புரிய வெச்சா அத்ததான் "பின்நவீனத்துவம்"னு கூவராங்களோ? இன்னாமோ போ... சோக்கா புட்ச்சாங்க பேர. (என்ன மாயமோ தெரியல.. இத பத்தி பேசுனா மெட்ராஸ் தமிழ்தான் வருது, சும்மா அருவி மாதிரி...)

நமக்கு தெரிஞ்சதெல்லாம் பொட்டி தட்டி பொழப்பு ஓட்டுறது மட்டும்தான். அதனால படம் போட்டு பாகங்களை குறிக்கலாம்னு எனக்கு நானே முடிவை எடுத்துட்டேன். அப்படியே கொஞ்சம் கீழே பாருங்க...


|
|
|
|
|
|
|
|
|
இது கிளிப்... துணி எல்லாம் காய போடுவேமே... (இது இந்த ஆட்டத்துல இல்ல...)


இது பின்னூசி.. ஜஸ்ட மிஸ்... எனக்கு தெரிஞ்ச வரலாற்று கூற்றுப்படி, பாரசீகர்கள் படையெடுத்த காலத்துல இருந்து இது இருக்கு. அதனால இது வெறும் பின் மட்டும்தான்.
என்ன ஒரு விந்தை. குண்டூசிய எடுத்து கொண்டை அலங்காரம் பண்ணி இருக்காங்க. ஒருவேளை இதுதான் பின்"நவீன"த்துவமோ?


மக்களே இதுக்கு கம்பெனி பொறுப்பு கெடையாது. இது என்னோட போன பதிவுல முழுக்க முழுக்க மேவீயின் பின்னூட்டத்தின் திட்டமிட்ட சதி. இந்த பதிவின் எல்லா நன்மை (சத்தியமா எதுவும் இல்லைன்னு தெரியும்) தீமைகளுக்கும் மேவீயை பாத்தியப்படுத்துகிறேன். இதையும் மீறி கும்மி அடித்துதான் தீருவேன் என்றால், ரெடி... ஸ்டார்ட்... மூஜிக்....


வலையுலகில் நானும் ஒரு.... ரௌடிதாங்க.. நம்புங்க.


1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ஜல்லி.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

அம்மா அப்பா வெச்ச பேர ஏன் நாசம் பண்ணனும்னு உண்மையான பேர நல்ல காரியத்துக்கு(அப்படி ஏதாவது செஞ்சதா விவரம் தெரிஞ்ச நாளா ஞாபகம் இல்லை) மட்டும்தான் பயன்படுத்தறதா போன பொது கூட்டத்துல நமது தொண்டர்கள் ஒரு தீர்மானம் எடுத்துட்டாங்க.

அதனால, வலைப்பதிவை ஆரம்பித்தால் என்ன பேர் வெக்குரதுன்னு அப்படியே தெருவுல ஓரு "துண்டடி" சாமியார் கணக்கா போகும்போது, ஏதோ காலை தடுக்கி விட்டுச்சு. என்னன்னு எடுத்துபாத்தா, ரோட்லேர்ந்து பேர்ந்து வந்திருந்த ஒரு கல்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..

காலு கை எல்லாம் வெக்கிலீங்க. அப்படியே தொபுக்கடீர்னு குதிச்சிட்டேன். ஆட்டைக்கு ரொம்ப ரொம்ப புதுசுங்கறதாலே பெருசா ஒன்னும் இல்லை.

4.
உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எந்திரன் படத்தின் எல்லா சீனிலேயும், நம்ம ப்ளாக் லிங்க் வர்ற மாதிரி ஒரு வியாபார டீலிங் நடந்துட்டு இருக்கு.

5.
வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

அடுத்தவன் காச ஆட்டை போடுறத விட, சொந்த செலவில சூனியம் வெச்சிக்கிறது பெட்டர்னு "சாணக்கியன் சொல்" தத்துவம் இருக்கு. அதனால முடிஞ்சவரை சொந்த சரக்குதான். சைடு டிஷ் மட்டும் எங்கேயாவது லவட்டிக்கிட்டு வந்துடறதுன்னு ஒரு கொள்கை.

விளைவுன்னு பார்த்தா, அயல்நாட்டில் இருப்பதால் இன்னும் ஒன்னும் தெரியலை. அடுத்த தடவை ஊருக்கு போனா ஏர்போர்ட்-லேயே ஆட்டோ, சுமோ எல்லாம் நிக்குமோ என்னமோ.

6.
நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

மற்றவர்களின் பதிவை படித்துவிட்டு, காதல் பட கிளைமாக்ஸ்ல வர்ற பரத் மாதிரி தலைல நங்கு நங்குன்னு குட்டிகிட்டு ரெண்டு நாள் அலைஞ்சதால, சரி ரைட்டு பாசுன்னு ஒரு பழிவாங்குற எண்ணத்தில் நானும் கும்மி அடிக்க கெளம்பிட்டேன்.

7.
நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒன்னு தமிழில், இன்னொன்னு ஆங்கிலத்தில் (இது என்னோட பர்சனல் பயோ-க்ராபி போட்டோ பதிவுகளுக்கு மட்டும்).

8.
மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

வலையுலகம் ஒரு கார்பரேஷன் கிரௌண்டு மாதிரி. யாருக்கு என்ன புடிக்குதோ வெளையாண்டுக்கலாம்கிரதால, யாரு மேலயும் கோவமோ பொறாமையோ கிடையாது.

9.
உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
நம்ம சித்ரா சகோதரியும், ராம்ஜீ அவர்களும். முதல் பதிவ தமிழிஷ்ல பிரபலமாக காரணமான முதல் அடி இவர்களின் பின்னூட்டமும் அறிவுரையும்

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

ஜல்லி அடிக்கனும், அடிச்சுகிட்டே இருக்கணும். இது ஆணி அறுவடை செய்ற காலமா இருக்கறதால, ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் இடைவெளி அதிகமா தோணும் (உங்க நல்லதுக்குன்னு சொன்னா கேட்கவா போறீங்க), இருந்தாலும் அப்ப அப்ப எங்களை மாதிரி புது ஆளுங்களையும் பதிவுலகுல லைட் அடிச்சு காமிங்க (அண்ணன் மாதவராஜ் மாதிரி).

Tuesday, August 3, 2010

நான் கடத்தப்பட்டேனா? - (ஜல்லி)

தலைப்பிற்க்கான பதில் கடைசியில்....


என்னோட டீம் டேமேஜெர் மும்முரமா ஏதோ வேலை செஞ்சுகிட்டு இருந்தார். நாமதான் எப்பவுமே வம்பிழுத்தான்பட்டி கவுன்சிலர் மாதிரி எவன்கிட்டயாவது பேச்சு கொடுப்போமே... டேமேஜெர்கிட்டே சும்மா பேச்சு கொடுப்போம்ன்னு போனேன்.

மனுஷன் அப்பத்தான் அவரோட டேமேஜெர்கிட்ட முக்காடு போட்டு அடி வாங்கி இருப்பாரு போல (எல்லார் முன்னாடியும் திட்டு வாங்கினா... அதுக்கு பேரு "வூடு கட்றது", அதாவது... நாம திட்டு வாங்கறது ஊருக்கே தெரியும்).

முக்காடு விஷயம் எனக்கு தெரியாது. நான் எப்பவும் போல ,

"என்ன சார், எப்படி இருக்கீங்க"

"நான் ரொம்ப நல்லா இருக்கேன், சொல்லுப்பா"

"இல்ல சார் எனக்கு ஒரு சந்தேகம்..." (ஆங்கிலத்தில் பேசியதால், விவேக்கோட மாடுலேஷன் குரலுக்கு தர முடியலை).

"சொல்லுப்பா.. எதுன்னாலும் தயங்காம கேளு"

"இது எல்லாம் எவ்ளோக்கு வாங்கினீங்க... எந்த கடையில வாங்கினீங்க... நானும் இந்தியா போகும்போது என் பேர போட்டு ஒரு ஏழு, எட்டு வாங்கிட்டு போகணும், அதுக்குதான்...."

நான் கேட்டது எதப்பாத்துன்னா.....- அந்த ஆளு 12 வருசமா ராத்திரி பகலுமா வேலை செஞ்சு ஒவ்வொரு அரையாண்டு முடிவுலயும், என்னடா இந்த ஆளு இப்பிடி கம்பெனிக்காக நாய் மாதிரி (நெசமாவே, ஒரு பேச்சுக்குதாங்க நாய்ன்னு சொன்னேன்) உழைக்கிறான்னு, விருது மேல விருதா எல்லா லெவல்ல இருந்தும் கொடுத்திருக்கிறத பாத்து -

அவமான படுத்தினா எந்த ஊர்காரனா இருந்தாலும் பழிவாங்குவான்னு அன்னிக்குத்தான் தெரிஞ்சுது.

நம்ம ஊர் எஸ்.ஐ.க்கு வேண்டாத ஒருத்தன் சிக்கிட்டான்னா, சொம்பு தொலஞ்சு போன கேஸ்ல இருந்து... கஞ்சா கேஸ் வரைக்கும் போடுவாங்களே, அத மாதிரி.. டீம்ல இருக்கிற எல்லாரோட அடுத்த ரெண்டு மாச ஆணியையும் எங்கிட்ட குடுத்து, பத்து நாள்ல எல்லா ஆணியையும் புடுங்கி குடுத்துரு செல்லம் அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டாரு...

இப்ப புரிஞ்சுதா ரெண்டு வாரமா நான் ஏன் இந்த பக்கமே தலை...கால்.. கை.. முட்டி..மொகரை.. காட்டலேன்னு...

ஏண்டா திரும்பி வந்தேன்னு துப்புறவங்களுக்கு...ஒன் நிமிட் ஸ்டாப்....

.

.

.

."நான் தனி ஆள் இல்ல...
.
.
.
.
.
.

குடும்பஸ்தன்..."


பாசக்காரபயலுவ... ஓட்டு போட வேணாமுன்னு சொன்னா கேட்கவா போறீங்க...
Related Posts with Thumbnails