Friday, November 12, 2010

Buffet - 12/11/2010 (13+)

இன்னிக்குத்தான் வ படம் பார்த்தேன் (குவாட்டர் கட்டிங்ன்னு போட்டதை தூக்கிட்டாங்களாம் - உண்மையா?). 


அந்த படத்துல வர்ற ஒரு வசனத்துல சொல்ற மாதிரி "ஏண்டா எல்லாத்துலேயும் ஒரு மெசேஜ் தேடி அலையிறீங்க". இதுதான் படத்தோட ஒன் லைன். 


போனமா காசு குடுத்தமா பிரியாணி துன்னமா-ன்னு இல்லாமா. 
பிரியாணி எப்படி செஞ்சீங்க?, எத்தனை மணிக்கு செஞ்சீங்க? எந்த அடுப்புல செஞ்சீங்க? அப்படீன்னு ஒரு தீசிஸ் எழுதற மாதிரி ஆராய்ச்சி பண்ணாம இருந்தா பிரியாணி படம் நல்ல பொழுதுபோக்கு படம். 


எனக்கு இந்த படம் பாக்கும்போது மெயின் தீம் (குட்டியூண்டு) Harold and Kumar ஞாபகம் வந்தது. அதில் எனக்கு ரொம்ப பிடித்த காமெடி கீழே.




13+ போட்டதுக்கு இதில் இறுதியில் வரும் வசனத்துக்காக!
=========================================================

2009 மார்ச்ல போட்ட பரஸ்பர நிதி திட்டம் 217% வளர்ந்திருந்தது. ரொம்ப சந்தோசமா ஓபன் பண்ணி பார்த்தா, நான் டிவிடென்ட் மறுமுதலீடு செய்த  50.52. வட போச்சே!





Reinvestment06/03/2009HDFC TAXSAVER - DIVIDEND

50.52


11/11/2010
139.26217.6500%

===========================================================
தமிழ் வளர்ப்பு

என்னோட மூன்று வயது மகன் பள்ளியில் ஆங்கிலம் பேசி பேசி வீட்டிற்கு வந்தால் எங்களிடமும் ஆங்கிலத்திலேயே பேச ஆரம்பித்து தமிழை மறந்து விடுவானோன்னு பயந்து போனதன் விளைவு. நானும் தங்கமணியும் வாரத்தில் ஒரு நாள் எந்த ஆங்கில வார்த்தையும் இல்லாமல் எங்களுக்குள் பேசுவது என முடிவு பண்ணி இருக்கோம். #தமிழுக்கு மரியாதை


==========================================================
புதிதாக திருமணம் ஆகி அமெரிக்கா வந்து முதன் முதலாக அடுப்பை பார்க்கும் பெண்களின் நிலைமை ரொம்ப பரிதாபம். சமைக்க தெரியாமல் திண்டாடுபவர்களின் தோழன் அண்ணன் சஞ்சய் இருக்கிற வரைக்கும் பிரச்சினை இல்லை. சீர் செனத்தியோட சஞ்சய்யோட ரெண்டு மூணு ரெசிபி DVD -யும் கொடுத்து அனுப்புங்க மக்கா. http://www.vahrehvah.com


Thursday, November 11, 2010

என்னாங்கடா நடக்குது...

அமெரிக்க அரசாங்கத்து மேலயே வழக்கு போட்டது கூகுள். ரெண்டு மூணு வாரம் முன்னாடி. எதுக்குன்னா டெண்டர் (RFQ - Request for Quotation)  குடுக்கும்போது அவனுங்களுக்கு வேணுங்கற மென்பொருள் மைக்ரோசாப்ட் மத்த தயாரிப்போட ஒரு பகுதியா இருக்கணும்னு சொல்லி கேட்ருக்கானுங்க. கூகுள்க்கு கோவம் வந்து வரிஞ்சு முடிஞ்சுகிட்டு கோர்ட்க்கு போயிருக்கு.

கூகுள்னா அவ்வளவு இளக்காரமா போயிடிச்சாடான்னு குழாயடி சண்டை ரேஞ்சுக்கு வழக்கு நடந்துட்டு இருக்கு. அஞ்சா நெஞ்சன் எல்லாம் இங்க இல்ல போல. 

கிங் மேக்கரும் கிங்கும் சேர்ந்து ஒன்னரை லட்சம் கோடிக்கு மேல சுருட்டி வாயில உட்டப்பவே இங்க யாரும் கேட்கலை.


கண்ணு கூகுளு, நீங்காட்டியும் இங்க வந்து அந்த டெண்டேர்ல அப்ளை பண்ணி இருந்து இந்த மாதிரி கேசு கீசு போட்டிருந்தீன்னா,  அப்பாலிக்கா google.com -ன்னு டைப் செஞ்சா இதா கீழ இருக்குற மாதிரி மாறி இருக்கும்டி. சாக்கிரத சொல்லிப்ட்டேன்.
























Monday, October 18, 2010

ககக..போ - வால்பையன் ஸ்பெஷல்!

ககக...போ பற்றி செவுத்துல முட்டிக்கிற பதிவ படிக்க இங்க அம்பை வைத்து குத்தவும்!


மிக சமீபத்தில் வாலுடன் ஃபோனில் கம்மாடிட்டி மார்க்கெட் பத்தி சில சந்தேகங்கள் கேட்டுக்கிட்டு இருந்தேன்.

வால்: ஹலோ... சொல்லுங்க தல.
(அஜித் ரேஞ்சுக்கு நமக்கு "நடிக்கவும்" தெரியாது. அஜித் மாதிரி பேஸ் கூட தெரியாது. அப்புறம் ஏன் நம்ம வாலு எல்லோரையும் தல தல-ன்னு கூப்பிடுராரு. தறுதலயோட சுருக்கமா இருக்குமோ?)

நான்: கமாடிட்டி டிரேடிங் பத்தி கொஞ்சம் சந்தேகம்ங்க.

கொஞ்சம் கேள்வி எல்லாம் கேட்ட பின்னாடி, ஏதோ நம்ம குட்டியூண்டு அறிவுக்கு  கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருந்தது.

நான்: சரிங்க பேசும்போது அடிக்கடி "அய்யனார் ரிஸ்க், லாபம் கம்மி"ன்னு சொன்னீங்களே, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லைங்கறதனாலே அப்படி சொன்னீங்களே.

மறுமுனையில் ஒரே அமைதி. என்ன ஆச்சு வாலு திடீர்னு ஆஃப் ஆகிட்டாரேன்னு நான் நாலஞ்சு தடவ "ஹலோ ஹலோ" சொன்னேன். லைன் ஒருவேளை கட் ஆகிடுச்சான்னு பாக்கும்போது, வாலு பேசினார்.

வால்: தல என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே. நான் சொன்னது INR தல. அய்யனார் இல்ல.

சொல்லிட்டு, "அவசர வேலை இருக்கு தல, நான் அப்புறம் பேசறேன்"ன்னுட்டு ஃபோனை வெச்சுட்டார். ஒருவேளை டாஸ்மாக்க்கு வண்டி வுட்டுருப்பாரோ????.

Friday, October 8, 2010

அடிச்சு கூட கேப்பாங்க, சொல்லீராதீக

ஒருநாள் நானும் எனது நண்பனும் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தோம். நல்ல கூட்டம். எங்களோட பஸ் ஸ்டாப் வந்ததும், அடிச்சு பிடிச்சு ரெண்டு பேரும் வெளியே வந்தோம்.

கீழே வந்தவன், திடீர்னு திரும்பி, பஸ்சுல நடுவுல ஜன்னல் ஓரமா உட்கார்ந்து இருந்தவனை பார்த்து " டேய் பச்சை சட்டை! ஏண்டா, நீங்க எல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கலை" என்று சொல்லிவிட்டு என்னையும் கூட்டிக்கிட்டு வேகமா நடந்தான். நான் திரும்பி பச்சை சட்டையை பார்த்தேன். பஸ்சில் இருக்கிற எல்லாரும் அவனை ஒரு பொறுக்கி ரேஞ்சுக்கு பாத்துகிட்டு இருந்தாங்க.

எனக்கு ஒன்னும் புரியாமல் "ஏண்டா மாப்ளை, நாமலே பஸ்சுல கடைசியில நின்னுகிட்டு இருந்தோம். அவன் யாருன்னும் தெரியாது. என்ன பண்ணினான்னும் தெரியாது. எதுக்குடா அவனை அப்படி திட்டிகிட்டு வந்தே?"ன்னேன்.

"ஒரு தைபூசத்துக்கு மச்சான், நான் பழனி போயிட்டு பஸ்சுல வந்துட்டு இருந்தேன். பொள்ளாச்சி பக்கம் வந்துகிட்டு இருக்கும்போது, இவன் அந்த பஸ் ஸ்டாப்புல நின்னுக்கிட்டு, தூங்கிட்டு இருந்த என்னை சத்தம் போட்டு கூப்பிட்டு 'மச்சான் எப்படி இருக்கீங்க? பிசினஸ் எல்லாம் எப்படி போகுது?' அப்படின்னான். எனக்கு ஒண்ணுமே புரியலைடா. நானும் ஒரு வாரமா குழம்பிகிட்டு இருந்தேன். யார்றா அவன் என்னைய பாத்து இப்படி விசாரிக்கிறான்னு ஒரே குழப்பமா இருந்துதுடா. ஆனா அதுக்கு அடுத்த வாரம்தான் நான் சூரியவம்சம் படம் பார்த்தேன். அன்னிக்கு எடுத்தாண்டா சபதம். இன்னிக்குதாண்டா கையில சிக்கினான்".

அந்த பச்சை சட்டைகாரன் நிலைமைய நெனச்சு பார்த்தேன். இப்போ பஸ்சுல அவனுக்கு என்ன ட்ரீட்மென்ட் கெடைசுட்டு இருக்கோன்னு.

டிஸ்கி: அந்த பச்சை சட்டைகாரனுக்கு தெரிஞ்சவங்க அல்லது பச்சை சட்டைகாரனே கூட உங்ககிட்ட யாரு என்னோட அந்த நண்பன்னு கேட்பாங்க நீங்க சொல்லீராதீக. அடிச்சுகூட கேப்பாங்க, சொல்லீராதீக! 

Sunday, August 22, 2010

Buffet - 23/08/2010

இந்த வாரம் எங்க போனாலும் பல்பு கூப்பிட்டு கூப்பிட்டு கொடுத்தாங்க. உதாரணத்துக்கு ஒண்ணு;


எனது மூன்று வயது பையன் காகிதத்தில் கிறுக்கி கிறுக்கி வெச்சிருந்தார். இதைப்பத்தி தங்கமணியிடம் கேட்டேன்.

"வைரமுத்து பையன் பாட்டு எழுதறான்" என சொல்லிப்போனாள்.


#############################################################################

அடுத்த வாரம் இங்கே நான் மகான் இல்லை போடுறாங்க. என்ன தமிழ் படம் போட்டாலும் போயிடறோம். மூன்று டாலருக்கு சுட சுட இட்லி விப்பாங்க.


#############################################################################


காலையில இருந்து கிட்ட தட்ட மூன்று மணி நேரம் செலவழித்து மட்டன் கோலா உருண்டை செய்து சாப்பிட்டு பார்த்தால் இனிப்போ இனிப்பு. கால் மணி நேரமா அதை முன்னாடி வைத்து நியுட்டன் ஆப்பிள் பார்த்த மாதிரி எங்க தப்பு நடந்ததுன்னு மண்டையை பிச்சுகிட்டு இருந்தேன். 

தங்கமணி என்னை ஒரு ஜந்து மாதிரி பார்த்து "நீங்க பொறித்து எடுத்த பாத்திரத்தில்தான் இரண்டு நாள் முன்னாடி குளோப் ஜாமூன் சக்கரை பாகு செய்தேன். நீங்க அடுப்பில் வெக்கிரக்கு முன்னாடி அதை கழுவலையா" என்றாள். நான் மட்டன் வாங்க போன வாரம் 120 மைல் போனது ஞாபகம் வந்தது.

#############################################################################





Wednesday, August 18, 2010

பின்நவீனத்துவமும், மேவீயும்


மறுபடியும் தம்பி (டம்பி) மேவீ ... என்னோட மூளையை கசக்க வெச்சு ஒரு பதிவு எழுத தூண்டிட்டார்... அது என்னன்னா... பின்நவீனத்துவம்...பின்நவீனத்துவம்னு ஒரு பக்கா சப்ஜெக்ட்.

அட நாமளும் நாடு நாடா திரியறமே... இத பத்தி ஏதாவது எழுதுவோம்னு பாத்தா...

"நடுவுல நடுவுல மானே தேனே போட்டுக்கணும்"னு டயலாக் மட்டும்தான் வருது.

கைக்கு வந்தத எழுதிப்ட்டு, பிரிஞ்சிருந்தா நவீனத்துவம்... இல்ல அப்பாலீக்கா பின்னாடி வந்து பொடணீய தட்டி புரிய வெச்சா அத்ததான் "பின்நவீனத்துவம்"னு கூவராங்களோ? இன்னாமோ போ... சோக்கா புட்ச்சாங்க பேர. (என்ன மாயமோ தெரியல.. இத பத்தி பேசுனா மெட்ராஸ் தமிழ்தான் வருது, சும்மா அருவி மாதிரி...)

நமக்கு தெரிஞ்சதெல்லாம் பொட்டி தட்டி பொழப்பு ஓட்டுறது மட்டும்தான். அதனால படம் போட்டு பாகங்களை குறிக்கலாம்னு எனக்கு நானே முடிவை எடுத்துட்டேன். அப்படியே கொஞ்சம் கீழே பாருங்க...


|
|
|
|
|
|
|
|
|




இது கிளிப்... துணி எல்லாம் காய போடுவேமே... (இது இந்த ஆட்டத்துல இல்ல...)










இது பின்னூசி.. ஜஸ்ட மிஸ்... எனக்கு தெரிஞ்ச வரலாற்று கூற்றுப்படி, பாரசீகர்கள் படையெடுத்த காலத்துல இருந்து இது இருக்கு. அதனால இது வெறும் பின் மட்டும்தான்.
















என்ன ஒரு விந்தை. குண்டூசிய எடுத்து கொண்டை அலங்காரம் பண்ணி இருக்காங்க. ஒருவேளை இதுதான் பின்"நவீன"த்துவமோ?






மக்களே இதுக்கு கம்பெனி பொறுப்பு கெடையாது. இது என்னோட போன பதிவுல முழுக்க முழுக்க மேவீயின் பின்னூட்டத்தின் திட்டமிட்ட சதி. இந்த பதிவின் எல்லா நன்மை (சத்தியமா எதுவும் இல்லைன்னு தெரியும்) தீமைகளுக்கும் மேவீயை பாத்தியப்படுத்துகிறேன். இதையும் மீறி கும்மி அடித்துதான் தீருவேன் என்றால், ரெடி... ஸ்டார்ட்... மூஜிக்....


வலையுலகில் நானும் ஒரு.... ரௌடிதாங்க.. நம்புங்க.


1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ஜல்லி.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

அம்மா அப்பா வெச்ச பேர ஏன் நாசம் பண்ணனும்னு உண்மையான பேர நல்ல காரியத்துக்கு(அப்படி ஏதாவது செஞ்சதா விவரம் தெரிஞ்ச நாளா ஞாபகம் இல்லை) மட்டும்தான் பயன்படுத்தறதா போன பொது கூட்டத்துல நமது தொண்டர்கள் ஒரு தீர்மானம் எடுத்துட்டாங்க.

அதனால, வலைப்பதிவை ஆரம்பித்தால் என்ன பேர் வெக்குரதுன்னு அப்படியே தெருவுல ஓரு "துண்டடி" சாமியார் கணக்கா போகும்போது, ஏதோ காலை தடுக்கி விட்டுச்சு. என்னன்னு எடுத்துபாத்தா, ரோட்லேர்ந்து பேர்ந்து வந்திருந்த ஒரு கல்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..

காலு கை எல்லாம் வெக்கிலீங்க. அப்படியே தொபுக்கடீர்னு குதிச்சிட்டேன். ஆட்டைக்கு ரொம்ப ரொம்ப புதுசுங்கறதாலே பெருசா ஒன்னும் இல்லை.

4.
உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எந்திரன் படத்தின் எல்லா சீனிலேயும், நம்ம ப்ளாக் லிங்க் வர்ற மாதிரி ஒரு வியாபார டீலிங் நடந்துட்டு இருக்கு.

5.
வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

அடுத்தவன் காச ஆட்டை போடுறத விட, சொந்த செலவில சூனியம் வெச்சிக்கிறது பெட்டர்னு "சாணக்கியன் சொல்" தத்துவம் இருக்கு. அதனால முடிஞ்சவரை சொந்த சரக்குதான். சைடு டிஷ் மட்டும் எங்கேயாவது லவட்டிக்கிட்டு வந்துடறதுன்னு ஒரு கொள்கை.

விளைவுன்னு பார்த்தா, அயல்நாட்டில் இருப்பதால் இன்னும் ஒன்னும் தெரியலை. அடுத்த தடவை ஊருக்கு போனா ஏர்போர்ட்-லேயே ஆட்டோ, சுமோ எல்லாம் நிக்குமோ என்னமோ.

6.
நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

மற்றவர்களின் பதிவை படித்துவிட்டு, காதல் பட கிளைமாக்ஸ்ல வர்ற பரத் மாதிரி தலைல நங்கு நங்குன்னு குட்டிகிட்டு ரெண்டு நாள் அலைஞ்சதால, சரி ரைட்டு பாசுன்னு ஒரு பழிவாங்குற எண்ணத்தில் நானும் கும்மி அடிக்க கெளம்பிட்டேன்.

7.
நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒன்னு தமிழில், இன்னொன்னு ஆங்கிலத்தில் (இது என்னோட பர்சனல் பயோ-க்ராபி போட்டோ பதிவுகளுக்கு மட்டும்).

8.
மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

வலையுலகம் ஒரு கார்பரேஷன் கிரௌண்டு மாதிரி. யாருக்கு என்ன புடிக்குதோ வெளையாண்டுக்கலாம்கிரதால, யாரு மேலயும் கோவமோ பொறாமையோ கிடையாது.

9.
உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
நம்ம சித்ரா சகோதரியும், ராம்ஜீ அவர்களும். முதல் பதிவ தமிழிஷ்ல பிரபலமாக காரணமான முதல் அடி இவர்களின் பின்னூட்டமும் அறிவுரையும்

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

ஜல்லி அடிக்கனும், அடிச்சுகிட்டே இருக்கணும். இது ஆணி அறுவடை செய்ற காலமா இருக்கறதால, ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் இடைவெளி அதிகமா தோணும் (உங்க நல்லதுக்குன்னு சொன்னா கேட்கவா போறீங்க), இருந்தாலும் அப்ப அப்ப எங்களை மாதிரி புது ஆளுங்களையும் பதிவுலகுல லைட் அடிச்சு காமிங்க (அண்ணன் மாதவராஜ் மாதிரி).

Related Posts with Thumbnails