Wednesday, July 28, 2010

ககக..போ (28/07/2010)

"அய்யா.. தங்களது மென்பொருளில் ஒரு பூச்சி உள்ளது.. நீங்கள் அதனை ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும். பிறகு மீண்டும் பூச்சி பிடிக்கும் துறைக்கு அனுப்பினால், நாங்கள் அதனை மறு ஆய்வு செய்து, சட்ட திட்டத்திற்கு உட்பட்டு அதனை ஏற்று கொள்வோம்".

"Hey dude! what'r u talkin' about? whatz goin' on with you man!"

"ஐயோ...." என்று கத்தினேன்... அப்புறம்தான் தெரிஞ்சுது கனவுன்னு... அடங்கொக்க மக்கா.. ரெண்டு லைன் வசனத்துக்கே இப்படி இருக்கே... இன்னும் 5-6 வருசத்துல என்ன எல்லாம் நடக்க போகுதோ....

"இதுக்குதான் டேசன் பக்கத்துல வீடு வேணாம்.. வீடு வேணாம்னு சொன்னதுன்னு" நட்ட நாடு ராத்திரியில வூட்டுகாரம்மா திட்டவும்தான் எனக்கு உரைத்தது.

ஜூனியர் விகடன் படிச்சுட்டே அப்படியே தூங்கிட்டேன். கடைசியா படிச்சது, தமிழ் வழியில் பொறியியல் கல்வி.

அய்யா மக்களே.. நான் எந்த கட்சிய சேந்தவனும் இல்லை. புரட்சி பண்ணவும் இங்கே எழுதவில்லை. நான் அடி பட்டத அடுத்தவன் பட கூடாதுங்கிற ஒரு மனிதபிமானத்துல எழுதறேன். ஏத்துக்க முடியாதவங்க தயவு செஞ்சு இதை இக்னோர் பண்ணவும். ஏத்துக்க முடிஞ்சவங்க "ககக..போ".

நாம ஆங்கிலம் படிச்சுட்டு வந்தே இங்கே குப்பை கொட்ட முடியலை... (அட, குப்பை தொட்டியவே பாக்க முடியலைங்க). ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஒரு "Design Review Meeting" - இதுக்கு தமிழ்ல என்னப்பா.. "வடிவமைப்பு சரி பார்த்தல் சந்திப்பு".

நான் எல்லா வெளக்கேன்னையும் புட்டு புட்டு வெச்சும், நேத்து என்கிட்டே வந்து ஒரு தமிழன் (என்னோட டீம்-ல இருக்குறவன்) கேட்குறான், "ஆமா, நான் உங்களை ஒண்ணு கேட்கனும்னு நெனச்சேன். Design Review Meeting அப்போ எதுக்கு எல்லாரையும் பீர் அடி.. பீர் அடி அப்படின்னு அடிக்கடி சொன்னீங்க. அடுத்தவாரம் கோ-லைவ் நீங்க என்னடான்னா இப்படி சொல்லிட்டு இருக்கீங்க".

அட பக்கி பயலே... இப்படின்னு நான் சொன்னதா எத்தனை பேரு கிட்ட சொன்னானோ... "அட மாப்ளை, அது நான் உங்களை எல்லாம் தெனம் உட்காந்து பீர் அடிக்க சொல்லலை. I said 'Be Ready'.

ஒரு தமிழனுக்கும் தமிழனுக்குமே இத்தனை பிரச்சினை. மக்களே நெனச்சி பாருங்க. "எங்கயோ போற காரே.. என் மேல வந்து ஏறே"-ங்கற கணக்கா, நாம போய்கிட்டு இருக்கோம்... - கண்டிப்பா தொடரும்...

டிஸ்கி: இதை ஒரு தொடர் பதிவா எழுதலாம்னு எண்ணம். கழக மக்களோ, அஞ்சாநெஞ்சன் விரும்பியோ இதை படித்தால் எனக்கு சொல்லவும்...



Saturday, July 24, 2010

சேவ் பண்ணுடா மகனே சேவ் பண்ணுடா...

சில சமயங்களில் யாரோ ஒருவரை திடீர் என எங்கயாவது பார்ப்போம்... காரணமே இல்லாமல் அவர் மேல் பற்றோ...வெறுப்போ வரும்... உடனே கொசுவர்த்தியை ரிவர்ஸ் அடிச்சீங்கன்னா...அப்போ தெரியும் என்ன காரணம்னு....

போன வாரம் வால்-மார்ட் வாசலில் ஷாப்பிங் முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தேன்... என்னை ஒரு கார் தாண்டி போகும்போது அதில் டிரைவர் சீட்டில் இருந்தவர் என்னை பார்த்தவர் திடீரென முறைத்து முறைத்து பார்த்துவிட்டு சென்றார்.

இரவு முழுவதும் தூக்கமில்லாமல் அந்த ஆளை பற்றியே நினைத்து ஏழு, எட்டு கொசுவர்த்தி தீர்ந்து போனது... எங்கேயோ இந்த ஆளுகிட்ட வம்பு இழுத்திருகோம்னு மட்டும் தெரிஞ்சுது...



இந்த ரெண்டும்தான் அதற்கான காரணங்கள்


சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு சின்ன பொட்டி தட்டுற பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஒன்றில் ஆணி பிடுங்கி கொண்டிருந்தேன். அந்த குடோன் (கம்பனின்னு சொன்னா மத்த கம்பெனிகாரங்க அடிக்க வந்துருவாங்க). அதன் ஓனர் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். அவர் ஒரு வாரம்தான் இங்கே இருப்பார் என்று டேமேஜெர் சொல்லி இருந்தார்.

நானும் அந்த ஆளுகிட்டே எப்படியாவது நல்ல பேரு எடுத்து அவர் போவதற்குள் அவரே "ஜல்லி, நீயும் என்கூட வந்துரு"ன்னு சொல்லும்படி செய்து காட்டுறேன் பாருங்கடான்னு கூட இருந்த மக்கள்கிட்டே சவால் விட்டேன். (ஏதோ ஈரோடு பஸ் ஏத்திவிட போற மச்சான்.. வாங்க மாப்பிள்ளை வந்து ஊர்ல ரெண்டு நாள் இருந்துட்டு போங்கன்னு சொல்ற மாதிரி, அமெரிக்காவையும் நெனச்சிட்டேன்.)

அவர் வந்த நான்காவது நாள் சாயந்திரம் ஆறு மணிக்கு மேலாகியும் நம்ம ஓனர் அண்ணன் எங்களை எல்லாம் விடாம அவருக்கு பின்னாடி நிக்க வச்சுட்டு, டாகுமென்ட் ஒன்னு ரெடி பண்ணி கொண்டிருந்தார். இன்னும் ரெண்டு நாள்தான் இருக்குங்கிற கவலை எனக்கு. அப்போது டாகுமென்ட் டைப் அடித்து கொண்டிருந்தவர், எலியை எடுத்து சேவ் பட்டன் மேல் கிளிக் பண்ணினார். ஒரு முறை இரு முறை அல்ல.. கிட்ட தட்ட எட்டு முறை.... அவரை இம்ப்ரெஸ் பண்ணுவதாக நினைத்து கொண்டு நான் அவரிடம் "என்ன சார்.. நல்ல்...லா... சேவ் பண்ணுறீங்களா?" என்றேன். அப்ப அவரு கோவமா ஒரு லுக் விட்டாருங்க பாருங்க... சிவன் நெற்றி கண் திறக்கும் போது பார்த்த ஒரு அனுபவம்.

அந்த ஆளை அதுக்கு அப்புறம் இப்போதான் பார்த்தேன். அருகில் இருந்த நண்பனிடம் கேட்டேன்... "என்னடா மச்சான்.. இன்னுமா அந்த ஆள் என் மேல கோவமா இருப்பான்". நண்பன் சொன்னான் "அதில்லை மச்சி... இத்தனை வருசத்தில அந்த ஆளு எத்தனை டாகுமென்ட் சேவ் பண்ணியிருப்பான். அப்போ எல்லாம் உன் மூஞ்சி தாண்டா அவனுக்கு ஞாபகம் வந்திருக்கும். அந்த கோவத்துல தாண்டா உன்னை அப்படி பாத்திருப்பான். அவன் பொண்டாட்டி மூஞ்சிய கூட அவன் அவ்ளோ தடவை நெனச்சிருக்க மாட்டான்"

கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், நம்மளையும் ஒருத்தன் இத்தனை வருஷம் நெனச்சுகிட்டு இருந்ததை நெனச்சு, ஒரே எமோஷனல் ஆகிருச்சு...

பாலும்...கோர்ட்ம்...




சில வருடங்களுக்கு முன்பு நான் பொட்டி தட்டி கொண்டிருந்த multi-national IT கம்பெனியில் நடந்தது. எங்க டீமுக்கு (6-7 பசங்க...3-4 பொண்ணுங்க) ட்ரைனிங் கொடுக்க ஆன்சைட்ல இருந்து ஒரு ஈயம் (அதாங்க Lead) வந்திருந்தார். Client எங்க எல்லாருக்கும் ட்ரைனிங் 2 வாரம் கொடுக்க சொல்லி அனுப்பி இருந்ததால், அவரும் கர்ம சிரத்தையாக இரவு பகலாக ஈயத்தை காய்ச்சி கொண்டிருந்தார்.

அன்று கடைசி நாள். எங்க ப்ராஜெக்ட்-ல அது மிக முக்கியமான டீம் என்பதாலும், அன்று ட்ரைனிங்-இன் கடைசி நாள் என்பதாலும்...அன்றைய கடைசி முப்பது நிமிட வகுப்புக்கு அந்த ப்ரொஜெக்டின் VP, சீனியர் VP, Senior Managers ஒரு ரெண்டு மூணு பேரு.. எல்லாரும் "இத்தனை நாளா இவன் என்னத்தை காய்ச்சி இருக்கான்னு பார்ப்போம்" என்ற சந்தேகத்துடன் வந்து அமர்ந்தார்கள்.

அவங்க வந்து உட்கார்ந்ததும், நம்ம ஈய பாண்டி டென்ஷன் ஆகிட்டாரு.. "எங்க அண்ணன் flight-லையே கம்பி புடிக்க மாட்டாரு"-ன்னு நாங்களும் அப்படியே ஈயத்தோட பேச்சை ரசிக்கிற மாதிரி (என்ன கொடுமை சரவணன் இது) உட்கார்ந்திருந்தோம்.

ஈயம் சொற்பொழிவை ஆத்த ஆரம்பிச்சிடுச்சு..."இது ரொம்ப முக்கியமான டூல்.. நீங்க எல்லாரும்..." அப்படின்னு ஆரம்பிச்சு "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது"ன்னு நாங்க எல்லாம் பாடாத குறைதான்...ஒரு பத்து நிமிஷம் கழிச்சு...

"உங்க எல்லாருக்கும் நான் ரெண்டு வாரம் ட்ரைனிங் கொடுத்திருக்கேன். இனிமே நீங்க தான் கஷ்டப்பட்டு மேல மேல கத்துக்கணும்" அப்படின்னுட்டு அந்த கடைசி வாக்கியத்தை விட்டாரு பாருங்க நம்ம ஈயம்... "Now, The court is in your ball".

Friday, July 23, 2010

முதல் பதிவை தமிலிஷ்-ல் "பிரபலமானவை" பகுதியில் சேர்த்த உங்களுக்கு.....



நன்றி! நன்றி!! நன்றி!!!

என் இனிய தமிழ் மக்களே.. தமிழ் தெரிஞ்ச தெலுங்கு மக்களே... தமிழ் தெரிஞ்ச மலையாள மக்களே... தமிழ் தெரிஞ்ச கன்னட மக்களே.. மற்றும் தமிழ் தெரிஞ்ச மற்ற எல்லாருக்கும்..

என்னோட கன்னி பதிவை முதல் நாளே "பிரபலமானவை" பகுதியில் சேர்த்த அன்பு நெஞ்சங்களுக்கு....நன்றி! நன்றி!! நன்றி!!!

என் வலை சேவை தொடர ஊக்குவித்த தோழர்களுக்கும் தோழிகளுக்கும்... (அடேய்... நீ போகலையா இன்னும்....அப்படின்னு நீங்க கேட்கிறது தெரியுது...)

நேற்று பூச்சி நெறைய இருந்ததால் இங்கே ஜல்லி அடிக்க முடியவில்லை... விரைவில்.. சரி சரி... இதோ கெளம்பிட்டேன்....



Thursday, July 22, 2010

4D - ஒரு அறிமுகம்

நிலம்
நீர்
காற்று...
சிமெண்ட் மரங்கள்
தூரத்தில் தெரியும் மேகங்கள் ....
யார் பற்ற வைத்தார் சூரிய அடுப்பு...?



ஹி....ஹி...திட்டுறவங்க மனசுக்குள்ள திட்டிக்குங்க....மத்தவங்க இந்த கன்னி சாமிக்கு ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க....

நானும்... தலைகாணியும்..பின்னே Air-Hostess-ம் - 2

இங்க எப்படி வந்து சேர்ந்தோம்ன்னு வழி தெரியாம முழிக்கறவங்க இங்க போய் ஒரு கடி வாங்கிட்டு வாங்க...

எப்படியோ ஒரு வழியா பிரஸ்ஸல்ஸ் வந்து சேர்ந்தேன். அந்த Air-Hostess ஏதாவது சாபம் விட்டிருப்பாளோன்னு ஒரு மாதிரி நூடுல்சோட விமானம் விட்டு இறங்கினேன். அங்க ஏர்போர்ட்ல பாதி பேர் பேய் அறைஞ்ச மாதிரியும்... மீதி பேர், காலைக்காட்சி, மேட்னி, ஈவ்னிங் ஷோ, நைட் ஷோ எல்லா நேரத்திலேயும் சுறா பாத்துட்டு வந்தவன் மாதிரியும் (அப்ப எல்லாரும் ஒரே மாதிரி இருந்தானுங்கன்னு சொல்றீங்களா...ரைட்டு) இருந்தானுங்க. இன்னோர் பாக்கெட் நூடுல்ஸ் தலைக்குள்ள போக...சரி என்னதான் நடக்குதுன்னு என்னோட சிகாகோ விமானம் கிளம்ப (என்னது கிளம்புமான்னு வடிவேலு வாய்ஸ்ல யாருங்க கேட்கிறது???) இருக்கிற கேட்-க்கு வந்தேன்.

என்னோட போர்டிங் பாஸ் குடுத்து அங்க கவுன்ட்டர்ல இருக்கிற வெள்ளைகார தொரைகிட்ட கேட்டேன். அவரு என்னை பார்த்து விட்ட லுக்ல... என்னமோ ஒரு அவதார் படத்துல வர்ற ஜூனியர் ஆர்டிஸ்ட் ரேஞ்சுக்கு நெனைசுட்டாரோன்னு பார்த்தேன் (சாருக்கு இன்னொரு பாக்கெட் நூடுல்ஸ் பப்...பார்சல்!!!).

"உங்க விமானம் இன்னிக்கு போகாது... வேணுமின்னா நீங்க இங்கேயே இருக்கிற ஏதாவது சேர்ல சீட் புடிச்சு உட்காருங்க"-ன்னான் (இனிமே எதுக்கு "ன்னார்")

"ஏன் இன்னிக்கு போகாது?"

"இல்ல சார் ஐஸ்லேன்ட்ல எரிமலை வெடிச்சதுனால எல்லா விமானமும் ரத்து செய்துட்டோம்னான்"

அடப்பாவிகளா பத்தினி சாபம் இவ்ளோ சீக்கிரத்துல பலிக்குதுன்னு... தொடர்ந்து ரெண்டு நாள் சுறாவும் அசலும் மாத்தி மாத்தி பார்த்தவன் மாதிரி ஆகிட்டேன்.

சரி நூல் விட்டு பார்ப்போமுன்னு "சரி எனக்கு வேற ஏதாவது வழி சொல்லுங்க"ன்னு தமிழ் பட மொக்கை கதாநாயகி, கதாநாயகன்கிட்ட சொல்ற மாதிரி கேட்டேன். "நான் உங்களை லண்டன் விமானத்துல அனுப்பறேன். அங்க இருந்து நெறைய விமானம் US போகுது. அங்க போய் கேட்டீங்கன்னா குடுப்பங்க"ன்னான். சரி யாருமில்லாத கடையில டீ ஆத்தரதவிட, இது எவ்வளவோ மேல் அப்படின்னுகிட்டு.....
(But அவன் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது).

லண்டன் மற்றும் US பற்றி விரைவில்....

மீண்டும் நாளை சந்திப்போமா (உபயம்: சாலமன் பாப்பையா).

நானும்... தலைகாணியும்..பின்னே Air-Hostess-ம் - 1


இரண்டு வருடங்களுக்கு அப்புறம் இந்தியா வந்திருந்தேன்... இருந்தது இரண்டு வாரம்தான் (அத வெச்சி ஒரு தனி மொக்கை போடுவோமில்லே)....

அடிக்க நெறைய பூச்சி (bug) பறந்துட்டு இருக்கு... ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சுன்னா, அப்படியே அங்கேயே ஏதாவது ஒரு பஸ் ஸ்டாண்ட்-ல உக்காந்து மொக்கை படங்களோட DVD விக்க பழகிகோன்னு டேமேஜெர் சொன்னது ஞாபகத்துக்கு வந்து தினமும் ஒனிடா பூதம் வேஷத்துல கனவுல வேற வர ஆரம்பிக்க...

சரியாய் 13-வது நாள் பொட்டியையும்... "பொட்டி"யையும்... கட்டிக்கிட்டு, நேரா கோயம்புத்தூர்-ல இருந்து சென்னை விமானம் பிடிச்சு, அக்கடான்னு விமானதுல வந்து உட்கார்ந்தேன்.

இங்கதான் விதி எனக்கு மட்டும் தெரியற மாதிரி கும்மி அடிச்சுக்கிட்டே என் மடியில வந்து உக்காந்துச்சு. விமானத்துல குடுத்த தலகாணிய மடியில வச்சுக்கிட்டு, சென்னை-ல தெரிஞ்ச நண்பர்களுக்கு போன் பண்ணி சொல்லிட்டு மொபைல்-ஐ switch-off பண்ணினேன்.

விமானம் கிளம்ப 10 நிமிஷம் இருக்கும் போது எங்க இருந்தோ ஒரு Air-Hostess பொண்ணு என்னை பாத்து வந்தாள். வந்தவள், என்னை பார்த்து கேட்ட கேள்வி இருக்கே...

"உங்க தலகாணிய தூக்க முடியுமா? நான் பார்க்கணும்" - Can you please lift your pillow? I wanna see - என்றாள். நான் அப்படியே ஸ்டன் ஆயிட்டேன்.

இதென்னடா வம்பா போச்சின்னு "நீங்க எதுக்கு அங்க பாக்கணும்?" அப்படின்னு அப்பாவியா (நெசமாதாங்க) கேட்டேன்.

அப்ப பாத்து பக்கத்துல இருந்த பக்கி பய ரெண்டு பேரும் க்ளுக்னு சிரிச்சிட்டானுங்க (தக்காளி, வெச்சிக்கிறேன் இருங்கடி).

அந்த Air-Hostess அவனுங்க ரெண்டு பேரையும் பார்த்து ஒரு கோவமா லுக் விட்டுகிட்டே (சோத்துல விஷம் வெச்சி குடுக்கிறேன் இருங்கடா).

என்னை பார்த்து "ஹலோ மிஸ்டர்.. நீங்க பெல்ட் போட்டு இருக்கீங்களா-ன்னு செக் பண்ணனும், காமிங்க"-ன்னா.

ஆஹா... சும்மா போற எருமைய கூப்பிட்டு முதுகு சொரிஞ்சு விட சொல்லி "Service Request" குடுத்த மாதிரி பேந்த பேந்த முழிச்சுகிட்டே, தலகாணிய தூக்கி காண்பிச்சேன்.

அவ என்னை ஒரு மாதிரியே பாத்துகிட்டு அடுத்த தலகாணிய...இல்ல அடுத்த seat பார்க்க போயிட்டா. அதுக்கு அப்புறம் நான் சாப்பாடே சாப்பிடாம போனது வேற கதை.

ஸ்டாப்-ஓவர் பெல்ஜியம் "Brussels" airport. அங்க நடந்தது தனி கதை.. அடுத்த பதிவில் தொடரும்.

Wednesday, July 21, 2010

Buffet - 22/07/2010


சத்தத்தை அணைத்துவிட்டு முதல் தடவை பாருங்க. அப்புறம் ஆன் செய்துவிட்டு ஒரு தடவை பாருங்க.

(எல்லோரும் தைரியமாய் பார்க்கலாம்...)




டிஸ்கி: இந்த வீடியோதான் விஜயோட 2011 தேர்தல்ல தோல்விக்கு ஆரம்பம்னு நீங்க நெனைச்சா, அதுக்கு கம்பெனி பொறுப்பு கிடையாது.(வீடியோ எடிட் செய்தவர் வீட்டிற்கு ஆட்டோ மற்றும் சுமோ அனுப்ப பட்டதா என்பது பற்றி தகவல் ஏதும் இல்லை).

---------------------------------------------------

இயற்கைதான் தன்னுள் என்ன என்ன வைத்திருக்கிறது...(சரி சரி தள்ளி நின்னு துப்புங்க)


----------------------------------------------------
உட்காந்து யோசிங்கப்பு...

1. அனிலும் முகேஷும் ஒன்று சேர்ந்தார்கள். RNRL மூடப்படும்.
2. மாறன் சகோதர்களுக்கும் கலைஞர் குடும்பத்துக்கும் சண்டை (பழைய செய்தி). சன் டிவிக்கு போட்டியாக கலைஞர் டிவி அறிமுகம் (பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பு!!!).

இதிலிருந்து தெரியறது என்னன்னா... சண்டை போடுங்க பொருளாதாரத்தை வளத்துங்க.






Related Posts with Thumbnails