Thursday, July 22, 2010

நானும்... தலைகாணியும்..பின்னே Air-Hostess-ம் - 1


இரண்டு வருடங்களுக்கு அப்புறம் இந்தியா வந்திருந்தேன்... இருந்தது இரண்டு வாரம்தான் (அத வெச்சி ஒரு தனி மொக்கை போடுவோமில்லே)....

அடிக்க நெறைய பூச்சி (bug) பறந்துட்டு இருக்கு... ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சுன்னா, அப்படியே அங்கேயே ஏதாவது ஒரு பஸ் ஸ்டாண்ட்-ல உக்காந்து மொக்கை படங்களோட DVD விக்க பழகிகோன்னு டேமேஜெர் சொன்னது ஞாபகத்துக்கு வந்து தினமும் ஒனிடா பூதம் வேஷத்துல கனவுல வேற வர ஆரம்பிக்க...

சரியாய் 13-வது நாள் பொட்டியையும்... "பொட்டி"யையும்... கட்டிக்கிட்டு, நேரா கோயம்புத்தூர்-ல இருந்து சென்னை விமானம் பிடிச்சு, அக்கடான்னு விமானதுல வந்து உட்கார்ந்தேன்.

இங்கதான் விதி எனக்கு மட்டும் தெரியற மாதிரி கும்மி அடிச்சுக்கிட்டே என் மடியில வந்து உக்காந்துச்சு. விமானத்துல குடுத்த தலகாணிய மடியில வச்சுக்கிட்டு, சென்னை-ல தெரிஞ்ச நண்பர்களுக்கு போன் பண்ணி சொல்லிட்டு மொபைல்-ஐ switch-off பண்ணினேன்.

விமானம் கிளம்ப 10 நிமிஷம் இருக்கும் போது எங்க இருந்தோ ஒரு Air-Hostess பொண்ணு என்னை பாத்து வந்தாள். வந்தவள், என்னை பார்த்து கேட்ட கேள்வி இருக்கே...

"உங்க தலகாணிய தூக்க முடியுமா? நான் பார்க்கணும்" - Can you please lift your pillow? I wanna see - என்றாள். நான் அப்படியே ஸ்டன் ஆயிட்டேன்.

இதென்னடா வம்பா போச்சின்னு "நீங்க எதுக்கு அங்க பாக்கணும்?" அப்படின்னு அப்பாவியா (நெசமாதாங்க) கேட்டேன்.

அப்ப பாத்து பக்கத்துல இருந்த பக்கி பய ரெண்டு பேரும் க்ளுக்னு சிரிச்சிட்டானுங்க (தக்காளி, வெச்சிக்கிறேன் இருங்கடி).

அந்த Air-Hostess அவனுங்க ரெண்டு பேரையும் பார்த்து ஒரு கோவமா லுக் விட்டுகிட்டே (சோத்துல விஷம் வெச்சி குடுக்கிறேன் இருங்கடா).

என்னை பார்த்து "ஹலோ மிஸ்டர்.. நீங்க பெல்ட் போட்டு இருக்கீங்களா-ன்னு செக் பண்ணனும், காமிங்க"-ன்னா.

ஆஹா... சும்மா போற எருமைய கூப்பிட்டு முதுகு சொரிஞ்சு விட சொல்லி "Service Request" குடுத்த மாதிரி பேந்த பேந்த முழிச்சுகிட்டே, தலகாணிய தூக்கி காண்பிச்சேன்.

அவ என்னை ஒரு மாதிரியே பாத்துகிட்டு அடுத்த தலகாணிய...இல்ல அடுத்த seat பார்க்க போயிட்டா. அதுக்கு அப்புறம் நான் சாப்பாடே சாப்பிடாம போனது வேற கதை.

ஸ்டாப்-ஓவர் பெல்ஜியம் "Brussels" airport. அங்க நடந்தது தனி கதை.. அடுத்த பதிவில் தொடரும்.

6 comments:

ராம்ஜி_யாஹூ said...

நான் உங்களை குறை கூறுவதை நினைக்க வேண்டாம்.
பயணப் பதிவுகள் எல்லாம் புகைப் படங்கள் இல்லாவிடில் படிப்பதற்கு ஜவகர் rojanaஊரக வளர்ச்சி திட்டம் படிப்பது போல அமைந்து விடும்.
அதுவும் இந்த மாதிரி பயணக் கட்டுரைகள் ஆறு ஆண்டுகளாக படித்து வருகிறோம் வேறு.


http://dubukku.blogspot.com/2008/07/blog-post_14.html

Saran said...

நன்றி ராம்ஜி நண்பரே... நான் ஆட்டைக்கு புதுசு... விரைவில் கற்று கொள்கிறேன். குறைகளை சுட்டி காண்பித்தமைக்கு மிக்க நன்றி. சீக்கிரம் சில புகைப்படம் போட்டு விடுகிறேன்.

கால்கரி சிவா said...

ஜெர்மனியில் ஒரு ப்ரஸ்ஸல்ஸ் இருக்கா? நான் போன போது (ஜூலை 9ந்தீ) ப்ரஸ்ஸல்ஸ் பெல்ஜியம்லே இருந்தது.

Chitra said...

ஸ்டாப்-ஓவர் ஜெர்மனி "Brussels" airport.

...... ரொம்பவே பீலிங்க்ஸ் ஆகி - Belgium - ஜெர்மனி ஆகிவிட்டது போல..... பாவம் சார், நீங்க.... அந்த air - hostess தப்புங்க, இது..... .... !

Saran said...

//கால்கரி சிவா said...
ஜெர்மனியில் ஒரு ப்ரஸ்ஸல்ஸ் இருக்கா? நான் போன போது (ஜூலை 9ந்தீ) ப்ரஸ்ஸல்ஸ் பெல்ஜியம்லே இருந்தது//


ஹிஹி... அரசியல்னா இதெல்லாம் சகஜமப்பா...
- தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி... நக்கீரரே! திருத்தி கொள்கிறேன் :-)

Saran said...

//...... ரொம்பவே பீலிங்க்ஸ் ஆகி - Belgium - ஜெர்மனி ஆகிவிட்டது போல..... பாவம் சார், நீங்க.... அந்த air - hostess தப்புங்க, இது..... .... !//

நீங்க சொல்றதுதாங்க சரி....அடிமை கெடைசிட்டான்னு எல்லாரும் சேர்ந்து...அவ்.....

Related Posts with Thumbnails