Wednesday, July 28, 2010

ககக..போ (28/07/2010)

"அய்யா.. தங்களது மென்பொருளில் ஒரு பூச்சி உள்ளது.. நீங்கள் அதனை ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும். பிறகு மீண்டும் பூச்சி பிடிக்கும் துறைக்கு அனுப்பினால், நாங்கள் அதனை மறு ஆய்வு செய்து, சட்ட திட்டத்திற்கு உட்பட்டு அதனை ஏற்று கொள்வோம்".

"Hey dude! what'r u talkin' about? whatz goin' on with you man!"

"ஐயோ...." என்று கத்தினேன்... அப்புறம்தான் தெரிஞ்சுது கனவுன்னு... அடங்கொக்க மக்கா.. ரெண்டு லைன் வசனத்துக்கே இப்படி இருக்கே... இன்னும் 5-6 வருசத்துல என்ன எல்லாம் நடக்க போகுதோ....

"இதுக்குதான் டேசன் பக்கத்துல வீடு வேணாம்.. வீடு வேணாம்னு சொன்னதுன்னு" நட்ட நாடு ராத்திரியில வூட்டுகாரம்மா திட்டவும்தான் எனக்கு உரைத்தது.

ஜூனியர் விகடன் படிச்சுட்டே அப்படியே தூங்கிட்டேன். கடைசியா படிச்சது, தமிழ் வழியில் பொறியியல் கல்வி.

அய்யா மக்களே.. நான் எந்த கட்சிய சேந்தவனும் இல்லை. புரட்சி பண்ணவும் இங்கே எழுதவில்லை. நான் அடி பட்டத அடுத்தவன் பட கூடாதுங்கிற ஒரு மனிதபிமானத்துல எழுதறேன். ஏத்துக்க முடியாதவங்க தயவு செஞ்சு இதை இக்னோர் பண்ணவும். ஏத்துக்க முடிஞ்சவங்க "ககக..போ".

நாம ஆங்கிலம் படிச்சுட்டு வந்தே இங்கே குப்பை கொட்ட முடியலை... (அட, குப்பை தொட்டியவே பாக்க முடியலைங்க). ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஒரு "Design Review Meeting" - இதுக்கு தமிழ்ல என்னப்பா.. "வடிவமைப்பு சரி பார்த்தல் சந்திப்பு".

நான் எல்லா வெளக்கேன்னையும் புட்டு புட்டு வெச்சும், நேத்து என்கிட்டே வந்து ஒரு தமிழன் (என்னோட டீம்-ல இருக்குறவன்) கேட்குறான், "ஆமா, நான் உங்களை ஒண்ணு கேட்கனும்னு நெனச்சேன். Design Review Meeting அப்போ எதுக்கு எல்லாரையும் பீர் அடி.. பீர் அடி அப்படின்னு அடிக்கடி சொன்னீங்க. அடுத்தவாரம் கோ-லைவ் நீங்க என்னடான்னா இப்படி சொல்லிட்டு இருக்கீங்க".

அட பக்கி பயலே... இப்படின்னு நான் சொன்னதா எத்தனை பேரு கிட்ட சொன்னானோ... "அட மாப்ளை, அது நான் உங்களை எல்லாம் தெனம் உட்காந்து பீர் அடிக்க சொல்லலை. I said 'Be Ready'.

ஒரு தமிழனுக்கும் தமிழனுக்குமே இத்தனை பிரச்சினை. மக்களே நெனச்சி பாருங்க. "எங்கயோ போற காரே.. என் மேல வந்து ஏறே"-ங்கற கணக்கா, நாம போய்கிட்டு இருக்கோம்... - கண்டிப்பா தொடரும்...

டிஸ்கி: இதை ஒரு தொடர் பதிவா எழுதலாம்னு எண்ணம். கழக மக்களோ, அஞ்சாநெஞ்சன் விரும்பியோ இதை படித்தால் எனக்கு சொல்லவும்...11 comments:

யாசவி said...

நல்லாயிருக்கு

VELU.G said...

ஹ ஹ ஹ ஹா

ரொம்ப நல்லா assist பண்ணறீங்க

இப்படியே இருங்க

Saran said...

//யாசவி said...
நல்லாயிருக்கு//

வாங்க வாங்க...

Saran said...

//VELU.G said...
ஹ ஹ ஹ ஹா

ரொம்ப நல்லா assist பண்ணறீங்க

இப்படியே இருங்க//

இது சாபமா? பாராட்டா?

Chitra said...

Design Review Meeting அப்போ எதுக்கு எல்லாரையும் பீர் அடி.. பீர் அடி அப்படின்னு அடிக்கடி சொன்னீங்க. அடுத்தவாரம் கோ-லைவ் நீங்க என்னடான்னா இப்படி சொல்லிட்டு இருக்கீங்க".


..... "be ready" to laugh.... ha,ha,ha,ha,ha,ha...

Saran said...

//Chitra said...
Design Review Meeting அப்போ எதுக்கு எல்லாரையும் பீர் அடி.. பீர் அடி அப்படின்னு அடிக்கடி சொன்னீங்க. அடுத்தவாரம் கோ-லைவ் நீங்க என்னடான்னா இப்படி சொல்லிட்டு இருக்கீங்க".


..... "be ready" to laugh.... ha,ha,ha,ha,ha,ha...//

வாங்க வாங்க...

ராம்ஜி_யாஹூ said...

அருமை, இன்னமும் இந்த சொற்றொடர்கள் புழக்கத்தில் உள்ளனவா:

டிசைன் ரிவியு மீட்டிங், பேரலல் ரன் , கோ லைவ்
இன்னமுமா இந்த ஊர் நம்பிக்கிட்டு இருக்கு - ஈ ஆர் பீ , sap implementation போன்றவற்றில்

ராம்ஜி_யாஹூ said...

Register and submit in Tamilish.com as well

Saran said...

//அருமை, இன்னமும் இந்த சொற்றொடர்கள் புழக்கத்தில் உள்ளனவா:

டிசைன் ரிவியு மீட்டிங், பேரலல் ரன் , கோ லைவ்
இன்னமுமா இந்த ஊர் நம்பிக்கிட்டு இருக்கு - ஈ ஆர் பீ , sap implementation போன்றவற்றில்
3 August 2010 20:28
ராம்ஜி_யாஹூ said...
Register and submit in Tamilish.com as well //

அட நிஜமாவே இன்னும் அதெல்லாம் இருக்குங்க.... என்ன ஒன்னு... இப்ப எல்லாம் எது தப்பா போனாலும் நம்மளை நல்லவன்னு சொல்லிடரானுங்க...

அடுத்த பதிவை பாதியிலேயே விட்டு வெச்சிருக்கேன் .. சீக்கிரம் முடிக்கணும்... பாருங்க இப்போ மணி காலை 5.. இப்போதான் office-லேர்ந்து வீட்டுக்கு வரேன்.. விரைவில் அடுத்த பதிவில்....

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நல்ல இருக்கிறது . தொடர்ந்து எழுதுங்கள் . பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள்

Saran said...

//!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
நல்ல இருக்கிறது . தொடர்ந்து எழுதுங்கள் . பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள்...//

உங்கள் ஊக்கத்திற்கு நன்றிங்க...

Related Posts with Thumbnails