Monday, October 18, 2010

ககக..போ - வால்பையன் ஸ்பெஷல்!

ககக...போ பற்றி செவுத்துல முட்டிக்கிற பதிவ படிக்க இங்க அம்பை வைத்து குத்தவும்!


மிக சமீபத்தில் வாலுடன் ஃபோனில் கம்மாடிட்டி மார்க்கெட் பத்தி சில சந்தேகங்கள் கேட்டுக்கிட்டு இருந்தேன்.

வால்: ஹலோ... சொல்லுங்க தல.
(அஜித் ரேஞ்சுக்கு நமக்கு "நடிக்கவும்" தெரியாது. அஜித் மாதிரி பேஸ் கூட தெரியாது. அப்புறம் ஏன் நம்ம வாலு எல்லோரையும் தல தல-ன்னு கூப்பிடுராரு. தறுதலயோட சுருக்கமா இருக்குமோ?)

நான்: கமாடிட்டி டிரேடிங் பத்தி கொஞ்சம் சந்தேகம்ங்க.

கொஞ்சம் கேள்வி எல்லாம் கேட்ட பின்னாடி, ஏதோ நம்ம குட்டியூண்டு அறிவுக்கு  கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருந்தது.

நான்: சரிங்க பேசும்போது அடிக்கடி "அய்யனார் ரிஸ்க், லாபம் கம்மி"ன்னு சொன்னீங்களே, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லைங்கறதனாலே அப்படி சொன்னீங்களே.

மறுமுனையில் ஒரே அமைதி. என்ன ஆச்சு வாலு திடீர்னு ஆஃப் ஆகிட்டாரேன்னு நான் நாலஞ்சு தடவ "ஹலோ ஹலோ" சொன்னேன். லைன் ஒருவேளை கட் ஆகிடுச்சான்னு பாக்கும்போது, வாலு பேசினார்.

வால்: தல என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே. நான் சொன்னது INR தல. அய்யனார் இல்ல.

சொல்லிட்டு, "அவசர வேலை இருக்கு தல, நான் அப்புறம் பேசறேன்"ன்னுட்டு ஃபோனை வெச்சுட்டார். ஒருவேளை டாஸ்மாக்க்கு வண்டி வுட்டுருப்பாரோ????.

Friday, October 8, 2010

அடிச்சு கூட கேப்பாங்க, சொல்லீராதீக

ஒருநாள் நானும் எனது நண்பனும் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தோம். நல்ல கூட்டம். எங்களோட பஸ் ஸ்டாப் வந்ததும், அடிச்சு பிடிச்சு ரெண்டு பேரும் வெளியே வந்தோம்.

கீழே வந்தவன், திடீர்னு திரும்பி, பஸ்சுல நடுவுல ஜன்னல் ஓரமா உட்கார்ந்து இருந்தவனை பார்த்து " டேய் பச்சை சட்டை! ஏண்டா, நீங்க எல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கலை" என்று சொல்லிவிட்டு என்னையும் கூட்டிக்கிட்டு வேகமா நடந்தான். நான் திரும்பி பச்சை சட்டையை பார்த்தேன். பஸ்சில் இருக்கிற எல்லாரும் அவனை ஒரு பொறுக்கி ரேஞ்சுக்கு பாத்துகிட்டு இருந்தாங்க.

எனக்கு ஒன்னும் புரியாமல் "ஏண்டா மாப்ளை, நாமலே பஸ்சுல கடைசியில நின்னுகிட்டு இருந்தோம். அவன் யாருன்னும் தெரியாது. என்ன பண்ணினான்னும் தெரியாது. எதுக்குடா அவனை அப்படி திட்டிகிட்டு வந்தே?"ன்னேன்.

"ஒரு தைபூசத்துக்கு மச்சான், நான் பழனி போயிட்டு பஸ்சுல வந்துட்டு இருந்தேன். பொள்ளாச்சி பக்கம் வந்துகிட்டு இருக்கும்போது, இவன் அந்த பஸ் ஸ்டாப்புல நின்னுக்கிட்டு, தூங்கிட்டு இருந்த என்னை சத்தம் போட்டு கூப்பிட்டு 'மச்சான் எப்படி இருக்கீங்க? பிசினஸ் எல்லாம் எப்படி போகுது?' அப்படின்னான். எனக்கு ஒண்ணுமே புரியலைடா. நானும் ஒரு வாரமா குழம்பிகிட்டு இருந்தேன். யார்றா அவன் என்னைய பாத்து இப்படி விசாரிக்கிறான்னு ஒரே குழப்பமா இருந்துதுடா. ஆனா அதுக்கு அடுத்த வாரம்தான் நான் சூரியவம்சம் படம் பார்த்தேன். அன்னிக்கு எடுத்தாண்டா சபதம். இன்னிக்குதாண்டா கையில சிக்கினான்".

அந்த பச்சை சட்டைகாரன் நிலைமைய நெனச்சு பார்த்தேன். இப்போ பஸ்சுல அவனுக்கு என்ன ட்ரீட்மென்ட் கெடைசுட்டு இருக்கோன்னு.

டிஸ்கி: அந்த பச்சை சட்டைகாரனுக்கு தெரிஞ்சவங்க அல்லது பச்சை சட்டைகாரனே கூட உங்ககிட்ட யாரு என்னோட அந்த நண்பன்னு கேட்பாங்க நீங்க சொல்லீராதீக. அடிச்சுகூட கேப்பாங்க, சொல்லீராதீக! 
Related Posts with Thumbnails