Tuesday, August 3, 2010

நான் கடத்தப்பட்டேனா? - (ஜல்லி)

தலைப்பிற்க்கான பதில் கடைசியில்....


என்னோட டீம் டேமேஜெர் மும்முரமா ஏதோ வேலை செஞ்சுகிட்டு இருந்தார். நாமதான் எப்பவுமே வம்பிழுத்தான்பட்டி கவுன்சிலர் மாதிரி எவன்கிட்டயாவது பேச்சு கொடுப்போமே... டேமேஜெர்கிட்டே சும்மா பேச்சு கொடுப்போம்ன்னு போனேன்.

மனுஷன் அப்பத்தான் அவரோட டேமேஜெர்கிட்ட முக்காடு போட்டு அடி வாங்கி இருப்பாரு போல (எல்லார் முன்னாடியும் திட்டு வாங்கினா... அதுக்கு பேரு "வூடு கட்றது", அதாவது... நாம திட்டு வாங்கறது ஊருக்கே தெரியும்).

முக்காடு விஷயம் எனக்கு தெரியாது. நான் எப்பவும் போல ,

"என்ன சார், எப்படி இருக்கீங்க"

"நான் ரொம்ப நல்லா இருக்கேன், சொல்லுப்பா"

"இல்ல சார் எனக்கு ஒரு சந்தேகம்..." (ஆங்கிலத்தில் பேசியதால், விவேக்கோட மாடுலேஷன் குரலுக்கு தர முடியலை).

"சொல்லுப்பா.. எதுன்னாலும் தயங்காம கேளு"

"இது எல்லாம் எவ்ளோக்கு வாங்கினீங்க... எந்த கடையில வாங்கினீங்க... நானும் இந்தியா போகும்போது என் பேர போட்டு ஒரு ஏழு, எட்டு வாங்கிட்டு போகணும், அதுக்குதான்...."

நான் கேட்டது எதப்பாத்துன்னா.....- அந்த ஆளு 12 வருசமா ராத்திரி பகலுமா வேலை செஞ்சு ஒவ்வொரு அரையாண்டு முடிவுலயும், என்னடா இந்த ஆளு இப்பிடி கம்பெனிக்காக நாய் மாதிரி (நெசமாவே, ஒரு பேச்சுக்குதாங்க நாய்ன்னு சொன்னேன்) உழைக்கிறான்னு, விருது மேல விருதா எல்லா லெவல்ல இருந்தும் கொடுத்திருக்கிறத பாத்து -

அவமான படுத்தினா எந்த ஊர்காரனா இருந்தாலும் பழிவாங்குவான்னு அன்னிக்குத்தான் தெரிஞ்சுது.

நம்ம ஊர் எஸ்.ஐ.க்கு வேண்டாத ஒருத்தன் சிக்கிட்டான்னா, சொம்பு தொலஞ்சு போன கேஸ்ல இருந்து... கஞ்சா கேஸ் வரைக்கும் போடுவாங்களே, அத மாதிரி.. டீம்ல இருக்கிற எல்லாரோட அடுத்த ரெண்டு மாச ஆணியையும் எங்கிட்ட குடுத்து, பத்து நாள்ல எல்லா ஆணியையும் புடுங்கி குடுத்துரு செல்லம் அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டாரு...

இப்ப புரிஞ்சுதா ரெண்டு வாரமா நான் ஏன் இந்த பக்கமே தலை...கால்.. கை.. முட்டி..மொகரை.. காட்டலேன்னு...

ஏண்டா திரும்பி வந்தேன்னு துப்புறவங்களுக்கு...ஒன் நிமிட் ஸ்டாப்....

.

.

.

."நான் தனி ஆள் இல்ல...
.
.
.
.
.
.

குடும்பஸ்தன்..."


பாசக்காரபயலுவ... ஓட்டு போட வேணாமுன்னு சொன்னா கேட்கவா போறீங்க...

3 comments:

Sridhar said...

ஒண்ணும் புரியல ,:))

Anonymous said...

iruthiyaka enna solla varukireerkal....

Saran said...

வாங்க ஸ்ரீதர்... வாங்க அனானி...இருங்க பார்ப்போம்.. எத்தனை பேருக்கு புரியுதுன்னு... புரியதவங்களுக்காக இந்த வார இறுதியில் ஒரு விளக்கவுரை அறிக்கை ஒன்னு விட்டுறலாம்...

புரிஞ்சவங்க உங்க பின்னூட்டத்தை கண்டிப்பா போடவும். இது என்னுடைய பாணியை மாற்றலாமா என்கிற முடிவை எடுக்க உதவும். இதை ஏன் சொல்றேன்னா...

பதிவிட்ட நான்கு மணி நேரத்தில் ஆறு ஓட்டு தமில்ஷ்ல் விழுந்திருக்கு....

Related Posts with Thumbnails