Wednesday, August 18, 2010

வலையுலகில் நானும் ஒரு.... ரௌடிதாங்க.. நம்புங்க.


1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ஜல்லி.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

அம்மா அப்பா வெச்ச பேர ஏன் நாசம் பண்ணனும்னு உண்மையான பேர நல்ல காரியத்துக்கு(அப்படி ஏதாவது செஞ்சதா விவரம் தெரிஞ்ச நாளா ஞாபகம் இல்லை) மட்டும்தான் பயன்படுத்தறதா போன பொது கூட்டத்துல நமது தொண்டர்கள் ஒரு தீர்மானம் எடுத்துட்டாங்க.

அதனால, வலைப்பதிவை ஆரம்பித்தால் என்ன பேர் வெக்குரதுன்னு அப்படியே தெருவுல ஓரு "துண்டடி" சாமியார் கணக்கா போகும்போது, ஏதோ காலை தடுக்கி விட்டுச்சு. என்னன்னு எடுத்துபாத்தா, ரோட்லேர்ந்து பேர்ந்து வந்திருந்த ஒரு கல்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..

காலு கை எல்லாம் வெக்கிலீங்க. அப்படியே தொபுக்கடீர்னு குதிச்சிட்டேன். ஆட்டைக்கு ரொம்ப ரொம்ப புதுசுங்கறதாலே பெருசா ஒன்னும் இல்லை.

4.
உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எந்திரன் படத்தின் எல்லா சீனிலேயும், நம்ம ப்ளாக் லிங்க் வர்ற மாதிரி ஒரு வியாபார டீலிங் நடந்துட்டு இருக்கு.

5.
வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

அடுத்தவன் காச ஆட்டை போடுறத விட, சொந்த செலவில சூனியம் வெச்சிக்கிறது பெட்டர்னு "சாணக்கியன் சொல்" தத்துவம் இருக்கு. அதனால முடிஞ்சவரை சொந்த சரக்குதான். சைடு டிஷ் மட்டும் எங்கேயாவது லவட்டிக்கிட்டு வந்துடறதுன்னு ஒரு கொள்கை.

விளைவுன்னு பார்த்தா, அயல்நாட்டில் இருப்பதால் இன்னும் ஒன்னும் தெரியலை. அடுத்த தடவை ஊருக்கு போனா ஏர்போர்ட்-லேயே ஆட்டோ, சுமோ எல்லாம் நிக்குமோ என்னமோ.

6.
நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

மற்றவர்களின் பதிவை படித்துவிட்டு, காதல் பட கிளைமாக்ஸ்ல வர்ற பரத் மாதிரி தலைல நங்கு நங்குன்னு குட்டிகிட்டு ரெண்டு நாள் அலைஞ்சதால, சரி ரைட்டு பாசுன்னு ஒரு பழிவாங்குற எண்ணத்தில் நானும் கும்மி அடிக்க கெளம்பிட்டேன்.

7.
நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒன்னு தமிழில், இன்னொன்னு ஆங்கிலத்தில் (இது என்னோட பர்சனல் பயோ-க்ராபி போட்டோ பதிவுகளுக்கு மட்டும்).

8.
மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

வலையுலகம் ஒரு கார்பரேஷன் கிரௌண்டு மாதிரி. யாருக்கு என்ன புடிக்குதோ வெளையாண்டுக்கலாம்கிரதால, யாரு மேலயும் கோவமோ பொறாமையோ கிடையாது.

9.
உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
நம்ம சித்ரா சகோதரியும், ராம்ஜீ அவர்களும். முதல் பதிவ தமிழிஷ்ல பிரபலமாக காரணமான முதல் அடி இவர்களின் பின்னூட்டமும் அறிவுரையும்

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

ஜல்லி அடிக்கனும், அடிச்சுகிட்டே இருக்கணும். இது ஆணி அறுவடை செய்ற காலமா இருக்கறதால, ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் இடைவெளி அதிகமா தோணும் (உங்க நல்லதுக்குன்னு சொன்னா கேட்கவா போறீங்க), இருந்தாலும் அப்ப அப்ப எங்களை மாதிரி புது ஆளுங்களையும் பதிவுலகுல லைட் அடிச்சு காமிங்க (அண்ணன் மாதவராஜ் மாதிரி).

20 comments:

Chitra said...

நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..

காலு கை எல்லாம் வெக்கிலீங்க. அப்படியே தொபுக்கடீர்னு குதிச்சிட்டேன். ஆட்டைக்கு ரொம்ப ரொம்ப புதுசுங்கறதாலே பெருசா ஒன்னும் இல்லை.



....very funny!

Chitra said...

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எந்திரன் படத்தின் எல்லா சீனிலேயும், நம்ம ப்ளாக் லிங்க் வர்ற மாதிரி ஒரு வியாபார டீலிங் நடந்துட்டு இருக்கு.

....hilarious!

Chitra said...

ஒவ்வொரு பதில்களையும் வாசித்து விட்டு, சத்தம் போட்டு சிரித்தேன். உங்கள் நகைச்சுவை உணர்வை கொண்டு, பதிவுலகில் சீக்கிரம் ஒரு கலக்கு கலக்குங்க! Best wishes!

மேவி... said...

அண்ணே இது வரைக்கும் திருவள்ளுவர் கூட என் பதிவுக்கு லிங்க் தந்ததில்லை ..நீங்க தந்து இருக்கீங்க சந்தோஷமா இருக்குன்னே ..

முதலில் கேள்வியும் அதற்கு பின்னாடி பதிலும் நீங்க எழுதி இருப்பதை பார்த்தாலே ..நீங்க ஒரு பின்நவீன ஆளுன்னு தெரியுது ...

மேவி... said...

"மேவி ஹெலிகாப்டரில்"

வாவ் , தல உங்களுக்கு சினிமா துறையில செம எதிர்காலம் இருக்குன்னு நினைக்கிறேன் ...இயக்குனர் சங்கர் அளவுக்கு பிரமாண்டம் காட்டுறீங்க..... பதிவு உலகத்துல முதல் முறையா பிரமாண்டமா ஒரு பதிவுன்னு டைட்டில் வைச்சு இருக்கலாம்

மேவி... said...

"அதனால, வலைப்பதிவை ஆரம்பித்தால் என்ன பேர் வெக்குரதுன்னு அப்படியே தெருவுல ஓரு "துண்டடி" சாமியார் கணக்கா போகும்போது, ஏதோ காலை தடுக்கி விட்டுச்சு. என்னன்னு எடுத்துபாத்தா, ரோட்லேர்ந்து பேர்ந்து வந்திருந்த ஒரு கல். '

கரிகால் சோழனுக்கு அடுத்த படியா உங்களுக்கு தான் பெயர் காரணம் நல்ல பொருந்தி இருக்கு .....

மேவி... said...

"ஆட்டைக்கு ரொம்ப ரொம்ப புதுசுங்கறதாலே பெருசா ஒன்னும் இல்லை.'
நீங்க திருநெல்வேலிகாரா அல்லது தென் மாநிலத்து ஆளா ??

மேவி... said...

"எந்திரன் படத்தின் எல்லா சீனிலேயும், நம்ம ப்ளாக் லிங்க் வர்ற மாதிரி ஒரு வியாபார டீலிங் நடந்துட்டு இருக்கு. "

ரோபோ ரஜினி உங்க பெயரை தான் பஞ்ச் டயலாக் பேசுதுன்னு கேள்வி பட்டேனே ???

பிறகு இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

மேவி... said...

அண்ணே லே அவுட் யா கொஞ்சம் மாத்துங்க ....பின்னூட்டங்களை open in new page அப்படின்னு கூடுங்க

அமுதா கிருஷ்ணா said...

ரொம்ப லொள்ளு தான்

Saran said...

//ஒவ்வொரு பதில்களையும் வாசித்து விட்டு, சத்தம் போட்டு சிரித்தேன். உங்கள் நகைச்சுவை உணர்வை கொண்டு, பதிவுலகில் சீக்கிரம் ஒரு கலக்கு கலக்குங்க! Best wishes!//

நன்றிங்க சித்ரா, உங்களது வாழ்த்துக்களுக்கு.....

- ஜல்லி

Saran said...

டம்பி மேவீ.. வெய்ட்... இருங்க வரேன்...

Saran said...

//அண்ணே இது வரைக்கும் திருவள்ளுவர் கூட என் பதிவுக்கு லிங்க் தந்ததில்லை ..நீங்க தந்து இருக்கீங்க சந்தோஷமா இருக்குன்னே ..//
இதுல திருவள்ளுவர் எங்கயா வந்தாரு..


//முதலில் கேள்வியும் அதற்கு பின்னாடி பதிலும் நீங்க எழுதி இருப்பதை பார்த்தாலே ..நீங்க ஒரு பின்நவீன ஆளுன்னு தெரியுது ...//

பின்நவீனத்துவத்தை விளக்க ஒரு பதிவு இருக்கு, அதுல வெச்சிக்கிறேன் இதுக்கான பதிலை...

-ஜல்லி

Saran said...

//"மேவி ஹெலிகாப்டரில்"

வாவ் , தல உங்களுக்கு சினி...முதல் முறையா பிரமாண்டமா ஒரு பதிவுன்னு டைட்டில் வைச்சு இருக்கலாம்//

அடடா மிஸ் பண்ணிட்டோமே...


//கரிகால் சோழனுக்கு அடுத்த படியா உங்களுக்கு தான் பெயர் காரணம் நல்ல பொருந்தி இருக்கு .....//

அட மகராசா.. இத நீங்க தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி, பக்கத்துலேயே உட்கார்ந்துகோங்க.. பின்னாடி வர்ற (அப்படின்னா, "பிற்காலத்துல வர்ற") சந்ததிகள் படிச்சு வரலாறை தெரிஞ்சுக்கும்.

ஜல்லியை கில்லி ஆக்கினதுக்கு உங்களுக்கு ஓரு பட்டம்... "மேவீ ஒரு மேதாவி"

Saran said...

//"ஆட்டைக்கு ரொம்ப ரொம்ப புதுசுங்கறதாலே பெருசா ஒன்னும் இல்லை.'
நீங்க திருநெல்வேலிகாரா அல்லது தென் மாநிலத்து ஆளா ?//

இந்த வட்டார, சதுர, முக்கோண வழக்கு எல்லாம் பதிவுலகத்துல ஒண்ணுதான்னு நெனைக்கிறேன்.... நான் பொறந்தது... 5 அடி 11 அங்குலம் வளந்தது எல்லாம் கோயமுத்தூருங்கோ... நமக்கு எந்த பக்கம்?

Saran said...

//அண்ணே லே அவுட் யா கொஞ்சம்...//

இப்ப எப்படிகீது....

Saran said...

// அமுதா கிருஷ்ணா said...
ரொம்ப லொள்ளு தான்//

ஒருவேளை சிறுவாணி தண்ணில வளந்ததால இருக்குமோ....ஹி ஹி

தெய்வசுகந்தி said...

அடடே நம்மூருக்காரரா நீங்க? கல்க்குங்க!!!

Saran said...

//தெய்வசுகந்தி said...
அடடே நம்மூருக்காரரா நீங்க? கல்க்குங்க!!!//

வாங்க வாங்க வணக்கமுங்கோ...நமக்கு புதூர் பக்கம், தங்கமணிக்கு கல்வீரம்பாளையம்...

சி.பி.செந்தில்குமார் said...

ரவுடிக்கு வணக்கம் ஹி ஹி

Related Posts with Thumbnails