Saturday, July 24, 2010

சேவ் பண்ணுடா மகனே சேவ் பண்ணுடா...

சில சமயங்களில் யாரோ ஒருவரை திடீர் என எங்கயாவது பார்ப்போம்... காரணமே இல்லாமல் அவர் மேல் பற்றோ...வெறுப்போ வரும்... உடனே கொசுவர்த்தியை ரிவர்ஸ் அடிச்சீங்கன்னா...அப்போ தெரியும் என்ன காரணம்னு....

போன வாரம் வால்-மார்ட் வாசலில் ஷாப்பிங் முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தேன்... என்னை ஒரு கார் தாண்டி போகும்போது அதில் டிரைவர் சீட்டில் இருந்தவர் என்னை பார்த்தவர் திடீரென முறைத்து முறைத்து பார்த்துவிட்டு சென்றார்.

இரவு முழுவதும் தூக்கமில்லாமல் அந்த ஆளை பற்றியே நினைத்து ஏழு, எட்டு கொசுவர்த்தி தீர்ந்து போனது... எங்கேயோ இந்த ஆளுகிட்ட வம்பு இழுத்திருகோம்னு மட்டும் தெரிஞ்சுது...



இந்த ரெண்டும்தான் அதற்கான காரணங்கள்


சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு சின்ன பொட்டி தட்டுற பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஒன்றில் ஆணி பிடுங்கி கொண்டிருந்தேன். அந்த குடோன் (கம்பனின்னு சொன்னா மத்த கம்பெனிகாரங்க அடிக்க வந்துருவாங்க). அதன் ஓனர் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். அவர் ஒரு வாரம்தான் இங்கே இருப்பார் என்று டேமேஜெர் சொல்லி இருந்தார்.

நானும் அந்த ஆளுகிட்டே எப்படியாவது நல்ல பேரு எடுத்து அவர் போவதற்குள் அவரே "ஜல்லி, நீயும் என்கூட வந்துரு"ன்னு சொல்லும்படி செய்து காட்டுறேன் பாருங்கடான்னு கூட இருந்த மக்கள்கிட்டே சவால் விட்டேன். (ஏதோ ஈரோடு பஸ் ஏத்திவிட போற மச்சான்.. வாங்க மாப்பிள்ளை வந்து ஊர்ல ரெண்டு நாள் இருந்துட்டு போங்கன்னு சொல்ற மாதிரி, அமெரிக்காவையும் நெனச்சிட்டேன்.)

அவர் வந்த நான்காவது நாள் சாயந்திரம் ஆறு மணிக்கு மேலாகியும் நம்ம ஓனர் அண்ணன் எங்களை எல்லாம் விடாம அவருக்கு பின்னாடி நிக்க வச்சுட்டு, டாகுமென்ட் ஒன்னு ரெடி பண்ணி கொண்டிருந்தார். இன்னும் ரெண்டு நாள்தான் இருக்குங்கிற கவலை எனக்கு. அப்போது டாகுமென்ட் டைப் அடித்து கொண்டிருந்தவர், எலியை எடுத்து சேவ் பட்டன் மேல் கிளிக் பண்ணினார். ஒரு முறை இரு முறை அல்ல.. கிட்ட தட்ட எட்டு முறை.... அவரை இம்ப்ரெஸ் பண்ணுவதாக நினைத்து கொண்டு நான் அவரிடம் "என்ன சார்.. நல்ல்...லா... சேவ் பண்ணுறீங்களா?" என்றேன். அப்ப அவரு கோவமா ஒரு லுக் விட்டாருங்க பாருங்க... சிவன் நெற்றி கண் திறக்கும் போது பார்த்த ஒரு அனுபவம்.

அந்த ஆளை அதுக்கு அப்புறம் இப்போதான் பார்த்தேன். அருகில் இருந்த நண்பனிடம் கேட்டேன்... "என்னடா மச்சான்.. இன்னுமா அந்த ஆள் என் மேல கோவமா இருப்பான்". நண்பன் சொன்னான் "அதில்லை மச்சி... இத்தனை வருசத்தில அந்த ஆளு எத்தனை டாகுமென்ட் சேவ் பண்ணியிருப்பான். அப்போ எல்லாம் உன் மூஞ்சி தாண்டா அவனுக்கு ஞாபகம் வந்திருக்கும். அந்த கோவத்துல தாண்டா உன்னை அப்படி பாத்திருப்பான். அவன் பொண்டாட்டி மூஞ்சிய கூட அவன் அவ்ளோ தடவை நெனச்சிருக்க மாட்டான்"

கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், நம்மளையும் ஒருத்தன் இத்தனை வருஷம் நெனச்சுகிட்டு இருந்ததை நெனச்சு, ஒரே எமோஷனல் ஆகிருச்சு...

7 comments:

Karthick Chidambaram said...

செம பதிவு நண்பரே. விழுந்து விழுந்து சிரித்தேன்.
//"என்ன சார்.. நல்ல்...லா... சேவ் பண்ணுறீங்களா?" என்றேன்.// ஹ ஹா :))))
//அதில்லை மச்சி... இத்தனை வருசத்தில அந்த ஆளு எத்தனை டாகுமென்ட் சேவ் பண்ணியிருப்பான். அப்போ எல்லாம் உன் மூஞ்சி தாண்டா அவனுக்கு ஞாபகம் வந்திருக்கும்.//ஹ ஹா :))))

Saran said...

//Karthick Chidambaram said...
செம பதிவு நண்பரே. விழுந்து விழுந்து சிரித்தேன்.//


நன்றிங்க... இப்போ ஒரு மூணு மணி நேரமா ஒரு பிரச்சினை... .பதிவை போட்டதுக்கு அப்புறம், நான் எப்போ சேவ் பட்டனை கிளிக் பண்ணினாலும் அந்த ஆள் மூஞ்சி தான் ஞாபகம் வருது..அவ்வ்வ்வ்...

Chitra said...

கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், நம்மளையும் ஒருத்தன் இத்தனை வருஷம் நெனச்சுகிட்டு இருந்ததை நெனச்சு, ஒரே எமோஷனல் ஆகிருச்சு...

......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,..... நீங்கள் நேரில் இருந்து சொல்ற மாதிரியான தொனியிலேயே எழுதி இருப்பது சூப்பர்ங்க! தொடர்ந்து கலக்குங்க!

Saran said...

//Chitra said...
கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், நம்மளையும் ஒருத்தன் இத்தனை வருஷம் நெனச்சுகிட்டு இருந்ததை நெனச்சு, ஒரே எமோஷனல் ஆகிருச்சு...

......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,..... நீங்கள் நேரில் இருந்து சொல்ற மாதிரியான தொனியிலேயே எழுதி இருப்பது சூப்பர்ங்க! தொடர்ந்து கலக்குங்க//

இப்போதான் கொஞ்சம் கொஞ்சம் கத்துகிட்டு வரேன். பாப்போங்க எங்க போய் முடியுதுன்னு.. வாழ்த்துகளுக்கு நன்றிகள்...

Saran said...

//ராம்ஜி_யாஹூ said...
nice, thanks for sharing//

இன்னும் வந்துகிட்டே இருக்குங்க...

Unknown said...

கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், நம்மளையும் ஒருத்தன் இத்தனை வருஷம் நெனச்சுகிட்டு இருந்ததை நெனச்சு,

Saran said...

//Arun J Prakash said...
கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், நம்மளையும் ஒருத்தன் இத்தனை....//

ரிப்பீட்டேய்....

Related Posts with Thumbnails