எப்படியோ ஒரு வழியா பிரஸ்ஸல்ஸ் வந்து சேர்ந்தேன். அந்த Air-Hostess ஏதாவது சாபம் விட்டிருப்பாளோன்னு ஒரு மாதிரி நூடுல்சோட விமானம் விட்டு இறங்கினேன். அங்க ஏர்போர்ட்ல பாதி பேர் பேய் அறைஞ்ச மாதிரியும்... மீதி பேர், காலைக்காட்சி, மேட்னி, ஈவ்னிங் ஷோ, நைட் ஷோ எல்லா நேரத்திலேயும் சுறா பாத்துட்டு வந்தவன் மாதிரியும் (அப்ப எல்லாரும் ஒரே மாதிரி இருந்தானுங்கன்னு சொல்றீங்களா...ரைட்டு) இருந்தானுங்க. இன்னோர் பாக்கெட் நூடுல்ஸ் தலைக்குள்ள போக...சரி என்னதான் நடக்குதுன்னு என்னோட சிகாகோ விமானம் கிளம்ப (என்னது கிளம்புமான்னு வடிவேலு வாய்ஸ்ல யாருங்க கேட்கிறது???) இருக்கிற கேட்-க்கு வந்தேன்.
என்னோட போர்டிங் பாஸ் குடுத்து அங்க கவுன்ட்டர்ல இருக்கிற வெள்ளைகார தொரைகிட்ட கேட்டேன். அவரு என்னை பார்த்து விட்ட லுக்ல... என்னமோ ஒரு அவதார் படத்துல வர்ற ஜூனியர் ஆர்டிஸ்ட் ரேஞ்சுக்கு நெனைசுட்டாரோன்னு பார்த்தேன் (சாருக்கு இன்னொரு பாக்கெட் நூடுல்ஸ் பப்...பார்சல்!!!).
"உங்க விமானம் இன்னிக்கு போகாது... வேணுமின்னா நீங்க இங்கேயே இருக்கிற ஏதாவது சேர்ல சீட் புடிச்சு உட்காருங்க"-ன்னான் (இனிமே எதுக்கு "ன்னார்")
"ஏன் இன்னிக்கு போகாது?"
"இல்ல சார் ஐஸ்லேன்ட்ல எரிமலை வெடிச்சதுனால எல்லா விமானமும் ரத்து செய்துட்டோம்னான்"
அடப்பாவிகளா பத்தினி சாபம் இவ்ளோ சீக்கிரத்துல பலிக்குதுன்னு... தொடர்ந்து ரெண்டு நாள் சுறாவும் அசலும் மாத்தி மாத்தி பார்த்தவன் மாதிரி ஆகிட்டேன்.
சரி நூல் விட்டு பார்ப்போமுன்னு "சரி எனக்கு வேற ஏதாவது வழி சொல்லுங்க"ன்னு தமிழ் பட மொக்கை கதாநாயகி, கதாநாயகன்கிட்ட சொல்ற மாதிரி கேட்டேன். "நான் உங்களை லண்டன் விமானத்துல அனுப்பறேன். அங்க இருந்து நெறைய விமானம் US போகுது. அங்க போய் கேட்டீங்கன்னா குடுப்பங்க"ன்னான். சரி யாருமில்லாத கடையில டீ ஆத்தரதவிட, இது எவ்வளவோ மேல் அப்படின்னுகிட்டு.....
(But அவன் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது).
லண்டன் மற்றும் US பற்றி விரைவில்....
மீண்டும் நாளை சந்திப்போமா (உபயம்: சாலமன் பாப்பையா).
No comments:
Post a Comment