அமெரிக்க அரசாங்கத்து மேலயே வழக்கு போட்டது கூகுள். ரெண்டு மூணு வாரம் முன்னாடி. எதுக்குன்னா டெண்டர் (RFQ - Request for Quotation) குடுக்கும்போது அவனுங்களுக்கு வேணுங்கற மென்பொருள் மைக்ரோசாப்ட் மத்த தயாரிப்போட ஒரு பகுதியா இருக்கணும்னு சொல்லி கேட்ருக்கானுங்க. கூகுள்க்கு கோவம் வந்து வரிஞ்சு முடிஞ்சுகிட்டு கோர்ட்க்கு போயிருக்கு.
கூகுள்னா அவ்வளவு இளக்காரமா போயிடிச்சாடான்னு குழாயடி சண்டை ரேஞ்சுக்கு வழக்கு நடந்துட்டு இருக்கு. அஞ்சா நெஞ்சன் எல்லாம் இங்க இல்ல போல.
கிங் மேக்கரும் கிங்கும் சேர்ந்து ஒன்னரை லட்சம் கோடிக்கு மேல சுருட்டி வாயில உட்டப்பவே இங்க யாரும் கேட்கலை.
கண்ணு கூகுளு, நீங்காட்டியும் இங்க வந்து அந்த டெண்டேர்ல அப்ளை பண்ணி இருந்து இந்த மாதிரி கேசு கீசு போட்டிருந்தீன்னா, அப்பாலிக்கா google.com -ன்னு டைப் செஞ்சா இதா கீழ இருக்குற மாதிரி மாறி இருக்கும்டி. சாக்கிரத சொல்லிப்ட்டேன்.