அந்த படத்துல வர்ற ஒரு வசனத்துல சொல்ற மாதிரி "ஏண்டா எல்லாத்துலேயும் ஒரு மெசேஜ் தேடி அலையிறீங்க". இதுதான் படத்தோட ஒன் லைன்.
போனமா காசு குடுத்தமா பிரியாணி துன்னமா-ன்னு இல்லாமா.
பிரியாணி எப்படி செஞ்சீங்க?, எத்தனை மணிக்கு செஞ்சீங்க? எந்த அடுப்புல செஞ்சீங்க? அப்படீன்னு ஒரு தீசிஸ் எழுதற மாதிரி ஆராய்ச்சி பண்ணாம இருந்தா
எனக்கு இந்த படம் பாக்கும்போது மெயின் தீம் (குட்டியூண்டு) Harold and Kumar ஞாபகம் வந்தது. அதில் எனக்கு ரொம்ப பிடித்த காமெடி கீழே.
13+ போட்டதுக்கு இதில் இறுதியில் வரும் வசனத்துக்காக!
=========================================================
2009 மார்ச்ல போட்ட பரஸ்பர நிதி திட்டம் 217% வளர்ந்திருந்தது. ரொம்ப சந்தோசமா ஓபன் பண்ணி பார்த்தா, நான் டிவிடென்ட் மறுமுதலீடு செய்த 50.52. வட போச்சே!
Reinvestment | 06/03/2009 | HDFC TAXSAVER - DIVIDEND | 50.52 | 11/11/2010 | 139.26 | 217.6500% |
===========================================================
தமிழ் வளர்ப்பு
என்னோட மூன்று வயது மகன் பள்ளியில் ஆங்கிலம் பேசி பேசி வீட்டிற்கு வந்தால் எங்களிடமும் ஆங்கிலத்திலேயே பேச ஆரம்பித்து தமிழை மறந்து விடுவானோன்னு பயந்து போனதன் விளைவு. நானும் தங்கமணியும் வாரத்தில் ஒரு நாள் எந்த ஆங்கில வார்த்தையும் இல்லாமல் எங்களுக்குள் பேசுவது என முடிவு பண்ணி இருக்கோம். #தமிழுக்கு மரியாதை
==========================================================
புதிதாக திருமணம் ஆகி அமெரிக்கா வந்து முதன் முதலாக அடுப்பை பார்க்கும் பெண்களின் நிலைமை ரொம்ப பரிதாபம். சமைக்க தெரியாமல் திண்டாடுபவர்களின் தோழன் அண்ணன் சஞ்சய் இருக்கிற வரைக்கும் பிரச்சினை இல்லை. சீர் செனத்தியோட சஞ்சய்யோட ரெண்டு மூணு ரெசிபி DVD -யும் கொடுத்து அனுப்புங்க மக்கா. http://www.vahrehvah.com